sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : அக் 20, 2024

Google News

PUBLISHED ON : அக் 20, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா: 'தினமலர்' நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்த, 'கார்ட்டூனிஸ்ட்' பீட்டர், தற்போது எங்கு இருக்கிறார்?

உங்கள் மாநிலம், கொச்சியில் தான் இருக்கிறார்; தற்போதும், வாரமலருக்கு, துணுக்குகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

அதிரை பிறைசாகுல், சென்னை: 'தி.மு.க., குடும்ப கட்சி என்று விமர்சிக்கும் போது, எனக்கு கோபம் வராது...' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...

குடும்பத்தினரே முக்கிய பதவிகளில் இருப்பதால், கோபம் வராது!

* எம்.ராஜேந்திரன், லால்குடி: கேரளாவைப் போல், தமிழகத்திலும் கள்ளுக்கடைகளை திறக்க, தி.மு.க., அரசு தயங்குவது ஏன்?

தி.மு.க., குடும்ப உறுப்பினர்களின் மது ஆலைகளிலிருந்து, 'டாஸ்மாக்'கிற்கு, மதுசப்ளை நடக்கிறது; கள்ளுக்கடையை திறந்தால், இவர்களின் வருமானம் பாதிக்கப்படும்!

* பி.ஜெயராஜ், சென்னை: மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொண்டால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி, தாராளமாக கிடைக்குமே... அதை ஏன் தமிழக அரசு மேற்கொள்வது இல்லை?

இணக்கமாகத் தான் இருக்கின்றனர்; ஆனால், அதை வெளிக்காட்டிக் கொண்டால், அரசியல் செய்ய முடியாது!

பி.முத்துகிருஷ்ணன், உறையூர், திருச்சி: குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜியின், கடந்த முறை அமைச்சர் பதவி காலத்தில், வேலைக்காக சிலர் பணம் கொடுத்து ஏமாந்தனரே... அவர்களுக்கு நீதி கிடைக்குமா?

லஞ்சம் கொடுப்பதும் தவறு தானே... அவர்கள் மீதும் வழக்கு இருக்கிறதே!

மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: தமிழக அரசின், 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்துக்கு, ஐ.நா., சபையின் விருது கிடைத்துள்ளது பற்றி?

நல்ல திட்டம்; அதனால், விருது கிடைத்துள்ளது! இதுபோன்று பல நல்ல திட்டங்களை செயல்படுத்தலாமே!

எம்.ராமநாதன், சென்னை: படிப்பறிவில்லாத பல பேர், உயர்ந்த நிலையில் இருக்கின்றனரே... எப்படி?

கடும் உழைப்பு மற்றும் சுய அறிவால் தொழிலில், வியாபாரத்தில் முன்னேறி இருக்கின்றனர்; முன்னேறுகின்றனர்; முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர்!

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டம்: பள்ளியில் ஆசிரியர் கேள்விக்கு பதில் சொன்னது; தற்போது, வாரமலர் வாசகர் கேள்விக்கு பதில் சொல்வது... எது பயமில்லாதது?

பள்ளியில் கடைசி பெஞ்ச்; அதனால், கேள்வியே கேட்க மாட்டார்கள்!






      Dinamalar
      Follow us