sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 12, 2025

Google News

PUBLISHED ON : ஜன 12, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மு.ஆதினி, சேலம்: 'பா.ம.க.,விடம் ஆறு மாதம், அரசு அதிகாரம் இருந்தால் போதும்; எவ்வளவோ நல்ல திட்டங்களை நிறைவேற்றித் தருவோம்...' என்கிறாரே, அக்கட்சியின் தலைவர் அன்புமணி?

நோ சான்ஸ்!

ஜெ.ரவிக்குமார், காங்கேயம்: கேள்விகளை தேர்வு செய்ய, ஏதாவது குழு வைத்துள்ளீரா...

நான் மிகவும் ரசித்து செய்யும், ரொம்ப பிடித்த பணி என்பதால், ஒரு கேள்வி விடாமல், நானே படித்து விடுவேன்!

சி.சவுந்தர்யா, புதுச்சேரி: நீங்கள், 'கார்வான்' ரேடியோவில், பாடல்களை இரவு துாங்கப் போகும் முன் கேட்பீர்களா அல்லது காலையில் துாங்கி எழுந்தவுடன் கேட்பீர்களா?

இரவு துாங்கப் போகும் முன் கேட்பேன்; அதிகாலை, 3:00 மணிக்கு எழுந்தவுடன், மீண்டும் கேட்கத் துவங்கி விடுவேன்!

எம்.சுப்பையா, கோவை: இங்குள்ள ரசிகர்களைப் போல், வெளிநாடுகளிலும் நடிகர், நடிகையர் மீது, மோகம் கொள்பவர்கள் உண்டா?

உண்டு; ஆனால், இங்கிருப்பவர்கள் போல், போஸ்டர், பேனர் வைத்து, பாலாபிஷேகம் எல்லாம் செய்ய மாட்டார்கள்!

ஆர்.ரமேஷ், பூந்தமல்லி, சென்னை: உங்களின் வெற்றிக்கு பின்னால்...

வாசகர்களாகிய நீங்கள் தான்!

நிதிஷ், கோவை: பணத்தை எவ்வாறு செலவழிக்க வேண்டும்?

தேவைப்பட்டதுக்கு மட்டும் செலவழித்து, மிச்சமாவதை சேமிப்பது மிக மிக அவசியம்!

* மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: ம.பி.,யில், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான, கென்பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டியிருப்பது குறித்து...

மிக நல்ல திட்டம்; இந்தியா முழுதும் இணைத்தால் நல்லது!

ஜி.அர்ஜுனன், அவிநாசி, திருப்பூர்: 'பார்லி.,யில் பேச, ஒண்ணு, ஹிந்தி தெரியணும்; இரண்டாவது, இங்கிலிஷ் தெரியணும்...' என்று, அமைச்சர் துரைமுருகன் கூறி இருக்கிறாரே...

தன் மகன் கதிர் ஆனந்தை, எம்.பி., ஆக்கிய பின்னர், அவர் படும் கஷ்டங்களைப் பார்த்ததும் தான், துரைமுருகனுக்கு விபரம் புரிகிறது போலிருக்கிறது!






      Dinamalar
      Follow us