sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : பிப் 02, 2025

Google News

PUBLISHED ON : பிப் 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.சோமசுந்தரம், சென்னை: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேடையில், முதல்வர் ஸ்டாலினின் பேரன் இன்பநிதியின் நண்பர்கள் அமர்வதற்காக, மாவட்ட கலெக்டரை எழுந்திருக்க சொன்னார்களாமே...

கலெக்டர்கள் அந்த அளவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை!

* எல்.மூர்த்தி, கோவை: தமிழகத்தில், மக்கள் அமைதியாக வாழ்ந்து வருவதாக, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே...

அப்படியா? எனக்குத் தெரியவில்லை; மக்களுக்கும் தெரியவில்லை!

ஏ.கே.சஞ்சீவிநாதன், ஈரோடு: இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்பது விதியா?

இப்போதைக்கு அப்படித்தான்!

* பி.சுப்ரமணியன், கல்லிடைக்குறிச்சி: 'கடந்த மூன்று ஆண்டுகளில், 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்து போட்டு உள்ளேன்...' என, ஸ்டாலின் கூறி இருக்கிறாரே...

மிகப்பெரிய சாதனை தான் போங்க!

மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: 'அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு தான், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்...' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, யோசனை தெரிவித்துள்ளாரே...

இவர் எவ்வளவு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்... தன் மகனையே, முதல்வர் ஆக்க முயற்சி செய்கிறாரே!

ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: 'அஜித் வாழ்க... விஜய் வாழ்க... என சொல்லிக் கொண்டே இருந்தால், நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' என, ரசிகர்களைக் கேள்வி கேட்டு அசத்திய, அஜித் பற்றி...

சபாஷ்! நிதர்சனத்தை மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்; இவர் தான், உண்மையான அரசியல்வாதி!

பி.எல்.பரமசிவம், மதுரை: பா.கே.ப., பகுதியில், அடிக்கடி வெளியாகும் வி.ஐ.பி., படங்களைத் தவிர்த்து, வாசகர்களுடன் எடுத்த படங்களையும் வெளியிடலாமே...

வாசகர் படங்கள், என்னுடன் சேர்ந்து வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன; பட விளக்கம் வெளியாகாததால், தெரிவதில்லை!

கீதா ராஜா, சென்னை: என்ன தான் கேள்விகளைப் படித்து விட்டு, பதில் எழுதுவது உங்களுக்கு இடப்பட்ட பணி என்றாலும், ஆயிரக்கணக்கில் வந்து குவியும் லெட்டர்களையும், 'இ-மெயில்'களையும் எப்படி பொறுமையுடன் கையாள்கிறீர்கள்?

இந்த உத்தியை எனக்கு சொன்னால், நான் பணி செய்யும் இடத்தில், நிறைய, 'இ-மெயில்'களைக் கையாள உதவுமே...

மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பணியை மேற்கொண்டால், எதுவுமே எளிது தான்!






      Dinamalar
      Follow us