PUBLISHED ON : ஏப் 05, 2026

அ நிறம் | அளவு
வெ.பரமசிவம், செங்கல்பட்டு: தமிழக அரசியலுக்கு வர வேண்டும் என்ற, தி.மு.க., கனிமொழியின் ஆசை நிறைவேற வாய்ப்புள்ளதா?
கனிமொழி சற்று தெளிவானவர்; உண்மைக்கு பயப்படுபவர். அவரை இங்கே சட்டசபையில் அமர வைத்தால், தங்களுக்கு சிக்கல் நேரும் என, அவரது அண்ணனும், அண்ணன் மகனும் கருதுகின்றனரோ, என்னவோ!
* மல்லிகா கோபால், புதுச்சேரி: புதுச்சேரியில், வரும் தேர்தலை சந்திக்கும் வாக்காளர்களில் ஒருவராகிய நான், குழம்பி உள்ளேன். நாளொரு கட்சி, பொழுதொரு காட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் வேட்பாளர்களால், யாருக்கு ஓட்டு என முடிவெடுக்கத் திணறுகிறேன். தீர்வு என்ன?
ஓட்டு போடுவது, நம் ஜனநாயக உரிமை, மல்லிகா! அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனித்து ஓட்டு போட்டால், நீங்கள் தப்பிக்கலாம்; இல்லையெனில், தமிழகம் போல் சிக்கி, அவதிப்பட வேண்டியது தான்!
ப.காளிதாசன், புதுக்கோட்டை: பெங்களூரு சாலையில் மது அருந்தியபடியே ஒரே பைக்கில் சென்ற. மூன்று டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி...
மற்றவர்களின் உடல்நிலையை சரிசெய்யும் டாக்டர்களே, மது அருந்தி, 'சிவிக் சென்ஸ்' இல்லாமல் நடந்து கொண்டது அநாகரிக செயல். அவர்கள் கைது செய்யப்பட்டது சரியே!
ரா.தீனதயாளன், விழுப்புரம்: 'தமிழக தேர்தல் முடிவுகள்-2026' பற்றி, அந்துமணியின் கருத்துக்கணிப்பு என்ன?
வித்தியாசமான கூட்டணிகள், செயல்படாத அரசியல்வாதிகள்... பொறுத்திருந்து பார்ப்போம், தீனதயாளன்!
செ.சவுமியா, தருமபுரி: துணை முதல்வர் உதயநிதியின் காரில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளது வேடிக்கையாக இல்லையா?
தவறேதும் இல்லையே, சவுமியா! தேர்தல் நேரமல்லவா... பறக்கும் படையினர், அவர்கள் வேலையை சரியாகச் செய்கின்றனர் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்!
என்.வளவன், மதுரை: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும், இலவச, 'பிரிஜ்', பருப்பு. மூன்று காஸ் சிலிண்டர். ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்ய பாஸ் அனைத்தும் தருவேன்...' என, அ.தி.மு.க.. பொதுச் செயலர், பழனிசாமி கூறியுள்ளாரே...
ஏற்கனவே முதல்வராக இருந்தவர்... தற்போதைய ஆட்சியிலும், கஜானா என்ன நிலையில் இருக்கிறதென்றும் தெரியும்... சற்றே சுதாரித்து. 'இவ்வளவு கொடுக்கப் போகிறேன், அதற்கு இவ்வளவு செலவாகும், இப்படி பணம் திரட்டப் போகிறேன்...' என்று சொல்லி இருக்கலாம்; ஆனால், சொல்லவில்லையே!
* ஜி.விஜயகுமார், கோவை: எவர்சில்வர் அண்டா கிடைக்காத கோபத்தில் மக்கள், தி.மு.க.,வினர் பதுக்கி வைத்திருந்த கிடங்கை, தேர்தல் பறக்கும் படையினருக்கு காட்டிக் கொடுத்த செயல் பற்றி...
இலவசங்களே வேண்டாம் இந்த தடலை ஏமாற மாட்டோம்! என்ற மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும். இலவசங்கள் தான், நம் மாநிலத்தை கடனாளி ஆக்குகின்றன; அதனால் தான் நம் மீது அதிக வரிகள் திணிக்கப்படுகின்றன.
வண்ணை கணேசன், கொளத்துார், சென்னை: 'எங்கள் கூட்டணிக்கு வர விரும்புபவர்கள் எங்களுடன் கலந்து ஆலோசிக்கலாம்...' என, பா.ம.க.,வை உருவாக்கிய, தற்போது அக்கட்சியை கைநழுவ விட்ட, ராமதாஸ் கூறுகிறாரே...
'ஜெயில் ரிட்டர்ன்' சசிகலாவோடு சேர்ந்து, ராமதாசும், 'காமெடி பீஸ்' ஆகிவிட்டார், பாவம்!
டி.ரவீந்திரன், சென்னை: கமல்ஹாசன், தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி விட்டாரே...
தனக்கு, எம்.பி., பதவி வாங்கியாச்சு... கட்சி உறுப்பினர்கள் எக்கேடு கெட்டால் என்ன! தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு, 'தியாகி' பட்டமும் சூட்டி விட்டார்... அது போதும் என, கமல்ஹாசன் நினைத்து விட்டார் போலும்!