sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/உருவாகும், 'பீட்டா' தலைமுறை!

உருவாகும், 'பீட்டா' தலைமுறை!

உருவாகும், 'பீட்டா' தலைமுறை!


PUBLISHED ON : பிப் 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 1982 முதல் 1996 வரை பிறந்தவர்கள், 'மில்லினியல்கள்' என்றும், 1996 முதல் 2010 வரை பிறந்தவர்கள், 'ஜென் இஸட்' என்றும், 2010 முதல் 2024க்கு இடையில் பிறந்தவர்கள், 'ஜென் ஆல்பா' என்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 2025ல், 'ஜென் பீட்டா' எனும் புதிய தலைமுறை உருவாகிறது.

'இன்ஸ்டாகிராம்' தான், உலகம்; 'ரீல்ஸ்'கள் தான், உயிர் காக்கும், 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்'கள் என, வாழும், தற்போதைய, 'ஜென் ஆல்பா' தலைமுறைக்கும், முந்தைய தலைமுறைக்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

இதில், அவர்களையே பழசாக்கும் வகையில் உருவாகியுள்ளது தான், 'ஜென் பீட்டா' தலைமுறை.

வரும், 2035ல், உலக மக்கள் தொகையில், 16 சதவீதத்தினர், 'ஜென் பீட்டா' தலைமுறையைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் 22ம் நுாற்றாண்டைப் பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

'பீட்டா' குழந்தைகளின் அன்றாட வாழ்வில், தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என, கூறப்படுகிறது.

குறிப்பாக, ஏ.ஐ., தொழில்நுட்பம் மற்றும் 'ஆட்டோமேஷன்' ஆகியவை, 'பீட்டா' தலைமுறையினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி, பணியிடங்கள், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்குகளிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.

தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும் அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் என, பல முக்கியமான சவால்களுடன் கூடிய, சமூக வாழ்க்கையை, 'பீட்டா' தலைமுறையினர் எதிர்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

—  ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us