
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்து நாட்டின் பழம்பெரும் சைக்கிள் தான், ஹைவீலர் சைக்கிள். இதன் முன் சக்கரம் மிகவும் பெரியது, பின் சக்கரம் சிறியது. அந்தக்கால வாகனமான இதன் மீது ஏறுவது மிகவும் சிரமமானது. நவநாகரிக வாகனங்கள் வந்தும், இந்த சைக்கிளில் பயணிப்பவர்கள் இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின், டாஸ்மானிய நகரில் ஏராளமான, ஹைவீலர் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் சைக்கிள் அணிவகுப்பு நடத்துகின்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும், 60 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
— ஜோல்னாபையன்