
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்டை நாடான நேபாளத்தில், அப்பிஹிமால் மலைப்பகுதியில் இருக்கிறது, கண்டேஸ்வரி கிராமம். இங்கு கஞ்சா செடிகள் பெருமளவில் பயிரிடப்படுகிறது.
படத்தில் இருப்பவர்கள், அப்பகுதியை சேர்ந்த கிராம பெண்கள். அவர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா? கஞ்சா இலைகளில் இருந்து, கஞ்சா சட்னி தயாரித்து, விற்பனை செய்வர்.
'பங்கு' எனப்படும் கஞ்சா செடிகள் தான், இவர்களின் முக்கிய வருவாய். கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்படும் போதை சட்னியை சாப்பாட்டின் போது, 'சைடு-டிஷ்' ஆக எடுத்து கொள்கின்றனர். கஞ்சா போன்ற எந்த போதை பொருட்களுக்கும் இங்கே தடை இல்லை என்பது, குறிப்பிடத்தக்கது.
— ஜோல்னாபையன்

