PUBLISHED ON : டிச 08, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிமகன்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் பூடான் நாட்டில், எல்லா நிகழ்ச்சிகளிலும் மது பரிமாறப்படுகிறது. 'ஆரா' என்ற மது, எல்லா வீடுகளிலும் சர்வ சாதாரணமாக காய்ச்சப்படுகிறது. மது காய்ச்ச தெரியாத பெண்களுக்கு அங்கு மதிப்பே இல்லை.
அங்குள்ள மலைகளில் இருந்து பல அருவிகள் கொட்டுகின்றன. அந்த சுத்தமான தண்ணீரில் தான் மது தயாரிக்கின்றனர். மூங்கிலால் செய்யப்பட்ட குடுவையில் மது நிரப்பி விற்பனை செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் தானியங்களில், 50 சதவீதமும் மது உற்பத்திக்கு பயன்படுகிறது.
இங்குள்ள மக்களில் அதிகமானோர் மது பிரியர்களாக இருப்பதால், அவர்களின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. எனவே, குடியை கட்டுப்படுத்துவது மிக அவசியம் என கருதுகிறது, அரசு. ஆனால், எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கிறது.
— ஜோல்னாபையன்