
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு காலத்தில் கேரளாவில் உள்ள பெரும்பான்மை வீட்டு கொல்லைபுறங்களில், வயதான பெண்மணிகள் மீன்களை சுத்தப்படுத்தும் காட்சிகளை பார்க்கலாம். இன்றோ... இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.
இங்குள்ள, மீன் கடைகளில் விதவிதமான மீன்களை விற்பனைக்கு வைத்து இருப்பர். அதிலிருந்து, தங்களுக்கு வேண்டிய மீன்களை வாடிக்கையாளர் தேர்வு செய்து, குழம்பாக வைக்க வேண்டும் என்று சொன்னால் போதும்.
குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர் விருப்பப்படி, குழம்பு அல்லது வறுவல் செய்து வீட்டிற்கு, 'டெலிவரி' செய்து விடுவர்.
— ஜோல்னாபையன்