PUBLISHED ON : ஆக 17, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்ரிக்கா நாட்டில் உள்ள சோமாலியாவில், கார்களை மிஞ்சும் அளவிற்கு, ஆட்டோ ரிக்ஷாக்கள் இருக்கின்றன. இங்கு ஓடும் ஆட்டோக்களில் பெரும்பாலும், நம்மூர் பஜாஜ் நிறுவன தயாரிப்பு தான். இதை, அங்கு, பஜாஜா என அழைக்கின்றனர்.
மீன் விற்கும் மார்கெட்டுகளில் இந்த ஆட்டோக்கள், மீன்பாடி வண்டிகளாக பயன்படுத்தப்படுகிறது. ஆட்டோவின் இருக்கைகளில், மீன்களை அள்ளிப்போட்டு செல்கின்றனர். இங்கு ஆட்டோ வைத்து இருப்பவர்கள், வசதியானவர் என்ற எண்ணமும் அங்குள்ளது.
—ஜோல்னாபையன்

