
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெட்ராஸ் கவர்னராக இருக்கும் போதே, 'டைபாய்டு' காய்ச்சலால், 1875ல், மரணம் அடைந்தார், லார்ட் ஹோபர்ட். நகரில் ஓடும் திறந்த நிலை சாக்கடை தான், 'டைபாய்டு' பரவக் காரணம் எனக் கூறினர், மருத்துவர்கள்.
அதன்பின் தான், மூடிய சாக்கடை, அதாவது பாதாள சாக்கடை அமைக்கும் யோசனை உருவானது. இதற்கு செயல் வடிவம் கொடுக்க, கேப்டன் ஹெக்டேர் துல்லோச் என்பவர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
அவர், 'மெட்ராஸின் நிலப்பரப்பு தட்டையானது. எனவே, ஒவ்வொரு தெருவின் ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப, பாதாளச் சாக்கடை அமைக்க வேண்டும்...' என, அறிக்கை கொடுத்தார்.
இன்றும் அதே நிலை தான். ஆனால், அவர் கூறியதை முறையாக செயல்படுத்த தான் ஆள் இல்லை என்கின்றனர், வரலாற்று ஆய்வாளர்கள்.

