sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கேப்டன் விஜயகாந்த்! (14)

/

கேப்டன் விஜயகாந்த்! (14)

கேப்டன் விஜயகாந்த்! (14)

கேப்டன் விஜயகாந்த்! (14)


PUBLISHED ON : நவ 23, 2025

Google News

PUBLISHED ON : நவ 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளசுகளை கவர்வதற்காகவே, உழவன் மகன் படத்தில், விஜயகாந்த் - ராதா நீச்சல் குளத்தில் இரவில் ஆடிப்பாடுவதாக ஒரு பாடல் காட்சி வைக்கப்பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய. சொல்லித் தரவா...' பாடலில், வாலிபத்தின் ஏக்கங்கள் அத்தனையும் குழைவாக கும்மாளமிட்டது.

அடிதடி என்றால், ஆர்ப்பரித்து ஓடி வருவார், விஜயகாந்த், நடனம் ஆடச் சொன்னால், 'ஆனை விடுங்க சாமி...' என்று நகர்ந்து விடுவார். சொல்லித்தரவா...' பாடலுக்கு ஆட மறுத்து அடம் பிடித்தார். 'ஏன் இதெல்லாம். எனக்கு வெக்கறீங்க. வராதுன்னா புரியாதா உங்களுக்கு?' என்று சீறினார்.

'இன்னைக்கு வேணும்ன்னா, 'பேக்-அப்' சொல்லிடறேன். நாளைக்கு கத்துக்கிட்டு வந்து ஆடுங்க...' என்று அடக்கமாக பதில் அளித்தார். ஆபாவாணன்.

எதையும், இன்று போய் நாளை வா என்று நீட்டிப்பதில், விஜிக்கு சம்மதம் கிடையாது. 'விஜயகாந்தால், 'ஷூட்டிங்' தடைபட்டது...' என்ற புகாருக்கு இடமளிக்காத நாயகன் அவர்.

சுந்தரம் மாஸ்டர், 'ஹீரோ'வுக்கு சிரமம் இல்லாமல் சில நடன அசைவுகளை செய்து காட்டினார். 20 நிமிடங்கள் போல அதை ஆடிப் பார்த்து, ரெடி.... ரெடி.. என்று வேகமெடுத்தார்.

உழவன் மகன் படத்தின், 'கிளைமேக்ஸ்' எடுக்கும் போது, எம்.ஜி.ஆர்., நடித்த உரிமைக்குரல் படம் உள்ளுக்குள் உசுப்பேற்றியது. ஒற்றை ரேக்ளா வண்டியில், விஜயகாந்த் ஆவேசமாக, தாய் மண்ணை மீட்க வரும் கட்டம். அதையே, 500 மாட்டு வண்டிகளை தாண்டி, ஒரு ரேக்ளா பந்தயத்தில் வென்று வருவதாக காட்டினால்...

துரிதமாக செயல்பட்டது, ராவுத்தர் பிலிம்ஸ். அப்போதைய, எம்.எல்.ஏ.. நெகமம் கந்தசாமியின் உதவியோடு, சூலுாரில் களம் இறங்கியது. பணம் ஒரு பொருட்டே இல்லை என்றானது. ஒரே நேரத்தில், ஐந்து, சினிமாஸ்கோப் கேமராகள் படம் பிடித்த அதிசயம் நடந்தது.

தமிழ் சினிமாவில் சிக்கனமாக படம் தயாரிப்பதில், முதலிடம் பெற்றது. 'முக்தா பிலிம்ஸ். அந்த நிறுவனம் உருவாக்கிய பிரமாண்டமான படைப்பு, நாயகன் திரைப்படம். அதிகப் பொருட்செலவை, தாங்கிக் கொள்ள இயலாமல், நாயகன் படத்தை, 'நெகடிவ் ரைட்ஸ் சோடு விற்று விட்டனர், முக்தா வி.ராமசாமி வி.சீனிவாசன் இருவரும்.

நாயகன் படத்தை வாங்கியவர், ஜி.வெங்கடேஸ்வரன். சுருக்கமாக, ஜி.வி., அந்தக் காலக்கட்டத்தில் கோடம்பாக்கம், அவரது சட்டைப்பைக்குள் அடைக்கலமானது.

கமல் - மணிரத்னம் கூட்டணியில், நாயகன் படத்துக்கு போட்டியாக, ரஜினி-ஏவி.எம்., கூட்டணியில், மனிதன் படம் மணிமுடிக்காக காத்திருந்தது. அந்த இருவல்லவர்களுக்கிடையே, உழவன் மகன் படமும் உரசிப் பார்க்க களம் இறங்கியது. விஜயகாந்த் நடித்து,

உழவன் மகன் மட்டுமல்லாமல், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், சட்டம் ஒரு விளையாட்டு படமும் தீபாவளி ரேசில் இருந்தன.

சென்னை, தேவிபாரடைசில், 100 நாட்களுக்கு மேல், உழவன் மகன் மகசூல் பார்த்தது. விஜயகாந்தின், 'கால்ஷீட்' கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது. அந்த நிலையிலும் அவர் எல்லா பட அதிபர்களையும் அனுசரித்தே நடந்து கொண்டார். தன்னால் யாராவது பாதிக்கப்பட்டதாக தெரிந்தால், அவர்களை கை தூக்கி விடுவது, விஜியின் பிறவிக் குணம்.

விஜயகாந்த் நடித்தும் ஓடாத படங்களில் ஒன்று. தீர்ப்பு என் கையில், அதன் தயாரிப்பாளர், சிவா. கரிமேடு கருவாயன் வெற்றியின் விளைவால், விஜயகாந்த்துக்கு இரட்டிப்பு தொகை கொடுத்து நஷ்டமடைந்தவர். உழவன் மகன், 'ஷூட்டிங்' கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற நேரம். லட்சக்கணக்கில் பணப்பட்டுவாடா நாளுக்கு நான் அதிகரித்தது, நம்பிக்கையான ஆட்கள் உடன் இருந்தால், பதட்டமின்றி அரிதாரம் பூசிக் கொள்ளலாம் என்று, நண்பன் சிவாவையும் தன்னோடு அழைத்து கொண்டார், விஜயகாந்த், சிவாவுக்கு சொந்த ஊர், கோபி.

அடுத்த தயாரிப்பின் பாகஸ்தராக, சிவாவை சேர்த்துக் கொள்ளச் சொல்லி, ராவுத்தரிடம் வற்புறுத்தினார், விஜி.

விஜயகாத்தின் மற்றொரு சினிமா நிறுவனமாக, 'தமிழன்னை சினி கிரியேஷன்ஸ்' உருவானது.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நீண்ட காலம் இணை இயக்குனராக பணியாற்றியவர். செந்தில்நாதன், விஜயகாந்தின் வெற்றிகரமான, 'செகன்ட் இன்னிங்ஸ்'காக வியர்வை சிந்தியவர், இவர்.

செந்தில்நாதன், தன்னிடம் வேலை செய்தது போதும் என்று, எஸ்.ஏ.சி.,க்கு தோன்றியது. எஸ்.ஏ.சி.,யின் சமகால இயக்குளர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் வெற்றிகரமான இயக்குளர்களாக ஜொலித்துக் கொண்டிருந்தனர். செந்திலும் அவ்வாறு தனித்துப் பிரபலமாக வேண்டும் என்பது, ஷோபா சந்திரசேகரின் விருப்பம். ஒரு முகூர்த்த நாளாக பார்த்து, தம்பதி சமேதராக, செந்திலை வழியனுப்பி வைத்தனர்.

உழவன் மகன் ஓஹோவென்று ஓடி வசூலித்தது. விஜிக்கு பேகும், புகழும் தேடித் தந்தது. ஆனாலும், அதற்கான பொருள் விரயமும், காலதாமதமும் மிக அதிகம். ஆகவே, செந்தில்நாதன் போன்று, குறுகிய காலத் தயாரிப்புகளில் சிறந்த அனுபவம் உள்ளவர்கள் இயக்குனராக அறிமுகமாவது தமிழ் சினிமாவுக்கு நல்லது என, நினைத்தார், விஜயகாந்த், சிவாவுடன், செந்தில்நாதனையும் இயக்குனராக சேர்ந்து, புதிய யூனிட் அமைந்தது.

பூத்தோட்ட காவல்காரன் என்ற கம்பீரமான, 'டைட்டில்' கேட்பவர்களை கவர்ந்தது. விஜியும் ராதிகாவும் முழு படத்திலும் வரத் தேவையில்லை. அவர்களுக்கு சிறப்பு தோற்றங்களே போதுமானதாக இருந்தது. ஏறக்குறைய, 20 நாட்களில், விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி விட்டன. ராதிகா நடிக்க வேண்டிய பகுதிகளை, 10 தினங்களில் எடுத்து முடித்து விட்டனர்.

நாயகியின் வயிற்றில், சிசு வளரும். அவளது காதலை எதிர்க்கும் தகப்பனே, அந்தக் கருவை கட்டையால் அடித்துக் கொன்று விடுவான்.

பிள்ளை பாக்கியம் இல்லாத ராதிகாவும், விஜயகாந்தும், ஒரு காதல் ஜோடியைக் காப்பாற்ற, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, 'கிளைமாக்ஸில் தங்கள் உயிரை விடுவதே, பூந்தோட்ட காவல்கள் படத்தின் கதை.

விஜயகாந்தும், ராவுத்தரும் எதிர்பார்த்தபடியே, குறுகிய காலத்தில் படத்தை முடித்து கொடுத்து விட்டார். டைரக்டர் செந்தில்நாதன், பின்னணி இசையை இனி, இளையராஜா பார்த்துக் கொள்வார் என்று எல்லாரையும் போல அவரது பொறுப்பில் விட்டு விட்டனர்.

இளையராஜாவின் தயாரிப்பான, ஆனந்த கும்மி படத்தை இயக்கியவர், கோகுல கிருஷ்ணா. திரை எழுத்தாளர் மற்றும் இயக்குனர். பூவே பூச்சூடவடி காதலுக்கு மரியாதை, வருஷம் 16 உள்ளிட்ட, இயக்குனர், பாசிலின் வெற்றி சித்திரங்களின் உரையாடலை தீட்டியவர் இவர். எதேச்சையாக, இளையராஜாவை சந்திக்க சென்றார், கோகுல கிருஷ்ணா.

அப்போது என்ன நடந்தது?

-தொடரும்

பா. தீனதயாளன்

நன்றி: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073






      Dinamalar
      Follow us