sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கேப்டன் விஜயகாந்த்! (25)

/

கேப்டன் விஜயகாந்த்! (25)

கேப்டன் விஜயகாந்த்! (25)

கேப்டன் விஜயகாந்த்! (25)


PUBLISHED ON : பிப் 08, 2026

Google News

PUBLISHED ON : பிப் 08, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரவு 9:00 மணிக்கு, விஜயகாந்திடம், ரமணா படத்தை பற்றி விவரிக்க ஆரம்பித்த, இயக்குனர், முருகதாஸ், 12:00 மணி நெருங்கும் வரை பரபரப்பாக கதை சொல்லிக் கொண்டிருந்தார். முருகதாசின் ஒவ்வொரு வரியையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார், விஜயகாந்த். தனக்கு புதிய முகவரி தரப் போகும் காவியம் என்பது உடனடியாக புரிந்தது.

விடாப்பிடியாக, விஜயகாந்திடம், தன்னுடைய எதிர்பார்ப்பை பிடிவாதமாக பதிவு செய்தார், முருகதாஸ். அப்படியும், விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு ஆதங்கம் தீரவில்லை. 'கிளைமேக்ஸ்ல சாகறது போல எடுக்காம, பொழைச்சுக்கற மாதிரி காட்டலாமே...' என்றார்.

விஜயகாந்துக்கு அடக்குமுறைகளுக்கு எதிரான, நாயகன் ரமணாவின் ஆவேசமும், அதையொட்டிய ரகசிய நடவடிக்கைகளும் பிடித்து போயின. முருகதாஸின் முயற்சிகளுக்கு தோள் கொடுக்க முடிவு செய்தார்.

'ரமணாவுக்காக, இறந்து போகவும் சம்மதம்...' என்றார். விஜயகாந்தின், 'லைப் டைம் ரோல்' அது என்பது உறுதியானது.

கதைப்படி, ரமணாவுக்கு சொந்த வாரிசுகள் கிடையாது. அனாதை பிள்ளைகளை தத்தெடுத்து வளர்ப்பதாக, முருகதாஸ் முன் யோசனையுடன் கதையை மாற்றினார். அதை, விஜயகாந்தும் வரவேற்றார்.

ரமணா படம் உருவாக துவங்கியது.

பகவான் ரமணர் முற்றும் துறந்த ஞானி. திருவண்ணாமலையில் ஆசிரமத்து சுற்றுவட்டார மழலைகளின் மகிழ்ச்சிக்காக, ரமண மகரிஷி உற்சாகத்துடன் தீபாவளிக்கு பட்டாசு வெடித்து, குழந்தைகளை குஷிப்படுத்திய வரலாறு உண்டு. ஆனால், 'ரமணாவில், நாயகனாகிய நீங்கள் ஒரு பாடல் காட்சிக்காக, வெடி வெடித்து, தீபாவளி கொண்டாட வேண்டும்...' என்று இயக்குனர், முருகதாஸ் கேட்ட போது மறுத்து விட்டார், விஜயகாந்த்.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில், பள்ளி செல்ல வேண்டிய ஏழை சிறுவர் - சிறுமியர் தினம் தினம் அல்லாடுகின்றனரே என்ற கவலை.

'நானும் பட்டாசு வெடிச்சுட்டு இருந்தேன். ஆனா, இப்ப இல்ல. இனியும் வெடிக்க மாட்டேன். தீ விபத்துல குழந்தை குட்டிகளை இழந்த தாய்மார்களோட அழுகுரல், இன்னமும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு...' என்று அந்த கொடிய அவலத்தை உள்ளம் நெகிழ, முருகதாசிடம் எடுத்து சொன்னார், விஜயகாந்த்.

விஜயகாந்துக்கு திரி கொளுத்தும் சிரமம் தராமல், தீபாவளி திருநாளில், நாயகி சிம்ரன் இறக்கும் காட்சியை சிறப்பாகவே படம் பிடித்தார், முருகதாஸ்.

ரமணாவை காட்டிக் கொடுக்கும் முயற்சியில், கான்ஸ்டபிள் சரவணனாக, நடிகர், மாதவன் நடிக்க வேண்டிய வேடத்தை கைப்பற்றியவர், நடிகர், யூகி சேது. இத்தனை சிறப்பாக இவர் நடிப்பாரா என்று யாரும், யூகிக்க இயலாதபடி, தன்னை அற்புதமாக அடையாளப்படுத்தி கொண்டார், யூகி சேது.

மருத்துவமனையில் இயக்குனர், முருகதாசின் தந்தைக்கு நேர்ந்த, கசப்பான கடைசி கால அனுபவம் தான், ரமணா படத்துக்கு மூலக்கரு.

வித்தியாசமான, விஜயகாந்த். அவருக்கென்று எப்போதும் புகழ் சேர்க்கும் வசனங்கள். பாடம் பிடிக்காத பள்ளி பிள்ளைகளையும், கவர்ந்தது. 'மன்னிப்பு, தமிழ்லயே எனக்கு புடிக்காத வார்த்தை...' என்று, அவர் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது.

ரமணா படத்தில், முதல்வராக வரும், ரவிச்சந்திரனும், விஜயகாந்தும் பேசும் உரையாடல் வெகு யதார்த்தமானது. விஜயகாந்தின் மறைவின் போது, மரண மாஸாக சமூக ஊடகங்களை கலக்கியது.

நவ., 4, 2002ல், தீபாவளி திருநாளில் வெளியானது, ரமணா.

பிரமாதமாக ஓடி, வசூலில் புதிய வரலாறு படைத்தது. மக்கள் கொண்டாடும் மகத்தான சித்திரமாக இன்று வரை நிலைத்திருக்கிறது.

வி ஜயகாந்த் நாயகனாக நடித்து, இயக்கிய ஒரே படம், விருதகிரி. டிசம்பர் 10, 2010ல் வெளியானது.

அதேநேரம், அரசியலில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தார், விஜயகாந்த்.

க டந்த, 2011ம் ஆண்டில், ஒரு வசந்த காலத்தில் தீட்டிய திட்டம். தன் இளைய மகன், ஷண்முக பாண்டியனை நாயகனாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டார், விஜயகாந்த்.

மச்சான் சுதீஷ், விஜயகாந்தின் மைந்தனை வைத்து படம் தயாரிப்பதாக முடிவானது. டிச.,12, 2013 ரஜினிகாந்தின் பிறந்தநாள். விஜயகாந்தின், சாலி கிராமம் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதியை அடைத்து பந்தல் போட்டு, தன் கலையுலக சகாக்களின் நல் ஆசிகளோடு, ஷண்முகப்பாண்டியனை, சகாப்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார், கேப்டன்.

ஏப்ரல் 2, 2015ல், சகாப்தம் படம் வெளியானது. வாரிசுடன் சிறப்பு தோற்றத்தில் காட்சியளித்தார், விஜயகாந்த்.

த ன் கலைப்பயணத்தின் நிறைவாக, நவம்பர் 22, 2015 அன்று, தமிழன் என்று சொல் படத்துக்காக மீண்டும் அரிதாரம் பூசிக்கொண்டார், விஜயகாந்த். ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்படைய, நின்று போனது, அப்படம். தமிழன் என்று சொல் முதல் நாள் படப்பிடிப்பில், விஜயகாந்த் பேசிய வசனம், 'ஜெயிச்சவன நாடே பார்க்கும் போது, அவனோட மொழி பேசப்படும்...' என்று இருந்தது.

சினிமாவில், கோடம்பாக்கம் உழைப்பாளிகளுக்கு மட்டுமல்லாமல், தன்னைத்தேடி வந்தவர்களுக்கெல்லாம் சோறு போட்டவர், விஜயகாந்த். ஆகஸ்ட் 25, தன் பிறந்தநாளை, வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடிய உலகின் ஒரே நட்சத்திரம், விஜயகாந்த்.

தமிழ்த் திரை உலகில் வேறு எந்த உச்ச நட்சத்திரத்துக்கும் வாய்க்காத பெருமை, விஜயகாந்துக்கு மட்டுமே உண்டு. இனிக்கும் இளமை துவங்கி, சகாப்தம் வரை அவர் நடித்து வெளியான அத்தனை படங்களுமே வண்ணத் தமிழ் சித்திரங்கள்.

கடந்த, 1965 முதல் 198-0 வரை வேற்று மொழி கலக்காமல், தமிழில், 150 படங்களுக்கு மேல், கதாநாயகனாக மாத்திரமே நடித்த முதல், 'ஹீரோ' நடிகர், ஜெய்சங்கர். அவருக்கு அடுத்து, அத்தகைய அரிய சாதனையை பூர்த்தி செய்தவர், விஜயகாந்த்.

எதையும் மூத்தோர் ஆசியோடு முறையாகச் செய்வதில், விஜயகாந்துக்கு நிகர் அவர் மாத்திரமே. அது என்ன?



- தொடரும்

பா. தீனதயாளன்

நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

தொலைபேசி எண்: 7200050073







      Dinamalar
      Follow us