PUBLISHED ON : பிப் 08, 2026

வாரமலர் இதழில், பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பகுதிகளில் சில மாதிரிகள்....
புள்ளிகள்
'இன்றைய புள்ளிகள் நாளைய பெரும் புள்ளிகள்' என்ற அடைமொழியுடன், சின்ன சின்னதாக சாதனை புரிந்தவர்களை பற்றி சிறு குறிப்பு வெளியானது. இப்பகுதியில் இடம்பிடித்த பலர், பின்னாளில் வி.ஐ.பி.,களாக பிரபலமாயினர்.
விதவிதமான போட்டிகள் வெளிவந்து, வாசகர்களுக்கு பரிசுகளை அள்ளித் தந்தது. அதில் ஒன்று தான் இது. இதற்கு விடை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...
இப்பகுதியில், ஒரு காலத்தில் ஒன்றாக படித்து, பழகியவர்கள், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து சென்றவர்களை, மீண்டும் சந்திக்க வைக்கும் பகுதியாக அமைந்தது. இதன் மூலம் பலர், தங்கள் நண்பர் - நண்பிகளை, காதலன் - காதலியரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றனர்.
அக்கரை சிரிப்பில் அக்கறை இல்லையோ! என்ற தலைப்பில், வெளிநாட்டு பத்திரிகையில் வெளியான பட தமாஷ்கள் தொடர்ந்து வெளியாகி, வாசகர்களை மகிழ்வித்தது.
