
இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கும், கமல்!
கமல் நடித்து நீண்டகாலமாக எந்த படங்களும் ஓடாமல் இருந்து வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த, விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து, கமல் பெரிதும் எதிர்பார்த்த, இந்தியன் -2 படம் தோல்வி அடைந்து, அவரை ஏமாற்றி விட்டது.
இந்நிலையில், விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க, கதை உருவாக்குமாறு கூறியிருக்கிறார், கமலஹாசன். அந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்தது போன்று, விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற இளவட்ட நடிகர்களுடன் கூட்டணி சேர்ந்து நடிக்கவும், திட்டமிட்டு வருகிறார்.
— சினிமா பொன்னையா
நயன்தாராவுக்கு அதிர்ச்சி கொடுத்த, மஞ்சு வாரியர்!
தன் பெயருக்கு முன்னால், 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று போடுவதை பெருமையாக கருதுவதாக கூறி வருகிறார், நடிகை நயன்தாரா.
ஆனால், 'என் பெயருக்கு முன், 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று போடுவதை பார்க்கும் போது தனிப்பட்ட முறையில் என்னை அவமானப்படுத்துவது போல் உணர்கிறேன். இதுபோன்ற பட்டங்கள் எனக்கு தேவையில்லை. இது தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்துகிறது. அதனால், கடைசி வரைக்கும் ரசிகர்களின் அன்பு மட்டுமே போதுமானது...' என்று கூறியிருக்கிறார், மஞ்சுவாரியர்.
மஞ்சுவாரியரின் இந்த கருத்து, நயன்தாராவை அதிர விட்டுள்ளது.
— எலீசா
குத்தாட்ட மோதல்!
புஷ்பா படத்தில், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய, சமந்தா, தற்போது, ஹிந்தி சினிமாவிலும் குத்தாட்டம் போட வாய்ப்பு தேடி வருகிறார்.
அதேசமயம், ரஜினியின், ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு, மூன்று கோடி ரூபாய் வாங்கிய தமன்னாவும், ஹிந்தி படங்களில் குத்தாட்ட வாய்ப்புகளுக்காக கல்லெறிந்து வருகிறார். மேலும், 'சமந்தா ஐந்து கோடி ரூபாய் கேட்டால், நான் மூன்று கோடி ரூபாய்க்கே, 'டூ பீஸில்' ஆட்டம் போடுகிறேன்...' என்று எகிறி அடித்து வருகிறார்.
இதனால், திரைக்கு பின்னால் சமந்தா, தமன்னாவுக்கு இடையே குத்தாட்ட மோதல் நடைபெற்று கொண்டிருக்கிறது.
— எலீசா
கறுப்புப் பூனை!
கொலவெறி இசையமைப்பாளர் வெளிநாடுகளில், 'ஹிட்' அடித்த பல, 'டியூன்'களை காப்பி அடித்து தமிழில் பல படங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். தற்போது, தெலுங்கில் ஜூனியர் நடிகர் நடித்துள்ள படத்திற்கும், சிங்கள தேசத்தில், 'ஹிட்' அடித்த ஒரு பாடலை அப்பட்டமாக காப்பி அடித்துள்ளார், கொலவெறி.
இதையடுத்து, சிங்கள பாடலையும் இந்த பாடலோடு இணைத்து, 'சோஷியல் மீடியா'வில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். அதனால், பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக் கொள்வது போன்று, கையும் களவுமாக சிக்கி்்க் கொண்டார். இதற்கு எந்த பதிலும் கொடுக்க முடியாமல், திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் விழி பிதுங்கி நிற்கிறார், கொலவெறி இசையமைப்பாளர்.
சினி துளிகள்!
* ஹிந்தியில், ஷாருக்கான் நடித்த, ஜவான் படத்துக்கு இசையமைத்தார், அனிருத். தற்போது தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆர்., நடித்துள்ள, தேவரா என்ற படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
* ராஞ்ஜனா படத்தை அடுத்து, மீண்டும் ஹிந்தியில், ஆனந்த் எல். ராய் இயக்கும் படத்தில் நடக்கிறார், தனுஷ். இந்த படத்தில் அவருக்கு கோடியாக, ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்த, கீர்த்தி சனோன் நடிக்கிறார்.
* எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும், 69வது படத்தில் அவருக்கு ஜோடியாக, சமந்தா நடிக்கிறார். இந்நிலையில், அவரது மகளாக, பிரேமலு மலையாள படத்தின் மூலம் பிரபலமான, மமிதா பைஜூ நடிக்கிறார்.
* கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த, ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னி வெடி போன்ற படங்கள் கிடப்பில் உள்ளன.
அவ்ளோதான்!

