
கமலஹாசனின் புதிய வியூகம்!
ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்த, இந்தியன்- 2 படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில் தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும், தக்லைப் படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். இந்த படத்தையும், 'சூப்பர் ஹிட்' ஆக்கி விட வேண்டும் என்று, திட்டமிட்டுள்ளார், கமலஹாசன்.
படம் திரைக்கு வரும்போது, வித்தியாசமான பிரமோஷன்களை செய்து, தக்லைப் படத்தை, 'சூப்பர் ஹிட்' ஆக்கிவிட வேண்டும் என்று, மணிரத்னத்துடன் இணைந்து, சில புதிய வியூகங்களை வகுத்து கொண்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
ஆவேசம் காட்டிய, சமந்தா!
குஷி படத்திற்கு பிறகு, விஜயின், 69வது படத்தில் நடிக்க போகும் சமந்தா, தற்போது, சிட்டாடல் என்ற, 'வெப்' தொடரில், 'ஆக்ஷன்' வேடத்தில் நடித்து வருகிறார். இதில் ஒரு சண்டை காட்சியில், அதிரடி 'ஆக்ஷன் ஹீரோ'களுக்கே, 'டப்' கொடுக்கும் வகையில், ஆவேசம் காட்டி நடித்திருக்கிறார், சமந்தா.
ஆனால், அந்த காட்சியில் நடித்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த சமந்தாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, 'காயம் படாமல், 'ஆக்ஷன்' நாயகி ஆக முடியாதா?' என்று, தன், 'எக்ஸ்' பக்கத்தில் பதிவு போட்டு இருக்கிறார், சமந்தா.
— எலீசா
கூலி படத்தில் இதுவரை பார்க்காத, ரஜினி!
ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்த ரஜினி, ஒரு கட்டத்தில், 'ஹீரோ' ஆனவர், பின் அடுத்தடுத்து, 'ஹிட்' படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் நடிகராகி விட்டார். தற்போது, கூலி படத்தில் நடிக்கும், ரஜினியை, 'ஹீரோ- - வில்லன்' என, இரண்டும் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார், லோகேஷ் கனகராஜ்.
அதோடு, 'இதுவரை எத்தனையோ படங்களில், ரஜினியை மாறுபட்ட கதாபாத்திரங்களில் பார்த்திருந்தாலும், இந்த, கூலி படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத, மாறுபட்ட மரண மாஸ் காட்டக்கூடிய, ரஜினியை பார்க்கலாம்...' என்கிறார்.
— சி.பொ.,
'டூ-பீஸ்'க்கு மாறிய, ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
தமிழில், காற்று வெளியிடை மற்றும் விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், ஸ்ரத்தா ஸ்ரீநாத். தென்னிந்திய படங்களில் கோடு போட்டு நடித்து வந்தவர், தற்போது பாலிவுட்டில் நுழைந்ததை அடுத்து, முதல் படத்திலேயே, 'டூ - பீஸ்' நடிகையாக உருவெடுத்து இருக்கிறார்.
இதையடுத்து, 'தென்னிந்திய படங்களில் மட்டும் ஏன், 'டூ--பீசில்' நடிக்க மறுத்தீர்கள்?' என்று கேள்வி கேட்டனர், இயக்குனர்கள்.
'பாலிவுட்டில், டபுளாக படக்கூலியை வெட்டுகின்றனர். அதே போன்று தென்னிந்திய பட தயாரிப்பாளர்களும் தாராளம் காட்டினால், நானும் தாராள மயமான நடிப்பை வெளிப்படுத்துவேன்...' என்று கூறியுள்ளார், ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
— எலீசா
சாய் பல்லவியின், புத்தாண்டு காதலர்!
'மகாபாரதத்தில் அர்ஜுனனின் மகனாக வரும் அபிமன்யு கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதன் காரணமாகவே கடந்த, 10 ஆண்டுகளாக இந்த கதாபாத்திரம் குறித்து நிறைய புத்தகங்களில் படித்து தெரிந்து கொண்டேன்.
'இந்த கதாபாத்திரத்தை நான் எனக்குள் காதலித்து வருவதால், ஒரு படத்திலாவது இந்த அபிமன்யு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகரித்துள்ளது...' என்கிறார், சாய் பல்லவி.
— எலீசா
உஷாரான யோகி பாபு!
வடிவேலுவின் காமெடி மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, 'நான் சொல்லும் தேதியில் தான் எனக்கான காட்சிகளை படமாக்க வேண்டும்...' என, நிபந்தனை போட்டு நடித்து வந்தார். சமீபகாலமாக, யோகி பாபுவும் இதையே கடைப்பிடித்து வந்தார்.
ஆனால், இதற்கு உடன்படாத சில முன்னணி, 'ஹீரோ'கள், தங்களுக்கு செட்டாக கூடிய வேறு சில காமெடியன்களை தங்கள் படங்களில் நடிக்க வைத்தனர். உஷாரான, யோகி பாபு, இப்போது முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில், அவர்கள் கேட்கும் தேதிகளில், 'கால்ஷீட்' கொடுத்து, நடிப்பதற்கு தயாராகி விட்டார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
பாணா காத்தாடி நடிகையின் முன்னாள் கணவர், திருமணத்திற்கு தயாராகி விட்டபோதும், நடிகையோ அதைப் பற்றி யோசிக்காமல் இருந்து வருகிறார். அதேசமயம் அம்மணியை சுற்றி எப்போதுமே பல பாய் பிரண்டுகள் மொய்த்துக் கொண்டிருப்பதாக, டோலிவுட்டில் கூறுகின்றனர்.
அதனால், 'சமீபகாலமாக புதிய படங்களை கைப்பற்றுவதை விட, பாய் பிரண்டுகளுடன் லுாட்டி அடிப்பதிலேயே அம்மணியின் கவனம் அதிகரித்து இருக்கிறது. எந்நேரமும் நடிகை போதையிலேயே மிதப்பதால் அவரை படங்களுக்கு, 'புக்' பண்ணுவதற்கு கூட பயமாக இருப்பதாக இயக்குனர்கள் ஒதுங்கி நிற்கின்றனர்...' என்கின்றனர், சினிமா துறையினர்.
சினி துளிகள்!
* சமீபத்தில், போர்ஷே ஜிடி 3 என்ற ரக காரை, நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார், அஜித்குமார். இந்த கார் மணிக்கு, 234 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியது.
* மகாராஜா படத்தை அடுத்து, பாண்டிராஜ், பாலாஜி தரணிதரன், ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நித்திலன் என, ஐந்து இயக்குனர்களின் படங்களில் நடிக்க, மூன்று ஆண்டுகளுக்கு, கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். விஜய் சேதுபதி.
அவ்ளோதான்!