sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 09, 2025

Google News

PUBLISHED ON : பிப் 09, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனிருத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் இயக்குனர்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பின், தமிழ் சினிமாவில் முன்னணி, 'ஹீரோ'களின் படங்களுக்கு அதிகமாக இசையமைத்து வரும், அனிருத், பாடல்களில் காட்டும் கவனத்தை பின்னணி இசையில் காட்டுவதில்லை. இதன் காரணமாகவே, தங்களது படங்களுக்கு வலுவான பின்னணி இசை வேண்டுமென்று நினைக்கும் இயக்குனர்கள், அவரை ஓரங்கட்ட துவங்கி விட்டனர்.

இந்த செய்தி, அனிருத்தின் காதுக்கு சென்றதை அடுத்து, 'இனிமேல் நான் இசையமைக்கும் படங்களில் பாடல்களை போலவே, பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்...' என, முக்கிய இயக்குனர்களை, வேறு இசையமைப்பாளர்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வருகிறார்.

— சினிமா பொன்னையா

காஜல் அகர்வால் பாணிக்கு மாறும், ஹன்சிகா!

திருமணத்திற்கு பின், உடல் எடையை குறைத்து, 'ஸ்லிம்'மான தோற்றத்திற்கு மாறிய, ஹன்சிகா, தொடர்ந்து, 'ஹீரோயின்' ஆக மட்டுமே நடிப்பேன் என, அடம் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால், அப்படி அவர் நடித்து வந்த, இரண்டு படங்களுக்கு பைனான்ஸ் கிடைக்காமல், கிடப்பில் போட்டு விட்டனர்.

அதனால், இப்போது, காஜல் அகர்வால் பாணியில், 'கேரக்டர் ரோல்'களில் நடித்தாவது, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வோம் என, சில அபிமான இயக்குனர்களிடம் பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார், ஹன்சிகா மோத்வானி. தனுஷ், ரவி மோகன் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில, 'ஹீரோ'களிடம் சிபாரிசும் கேட்டு வருகிறார்.

— எலீசா

சுந்தர்.சியிடம், சரண்டர் ஆன விஷால்!

விஷாலின் மார்க்கெட் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, சுந்தர். சி இயக்கத்தில் அவர் நடித்து, 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த, மத கஜ ராஜா படம் திரைக்கு வந்து, 'ஹிட்' கொடுத்தது.

இதன் காரணமாக, ரவி மோகன் மற்றும் ஆர்யா பாணியில் அடுத்தடுத்து வில்லனாக நடித்தாவது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள நினைத்த, விஷால், தற்போது, சுந்தர்.சியிடம் தன்னை வைத்து படம் எடுத்து, கைதுாக்கி விடுமாறு, 'சரண்டர்' ஆகி உள்ளார். இதையடுத்து, மீண்டும், விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், சுந்தர்.சி.

—சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் சரியான கவனம் செலுத்தாமல், தன்னுடன் நடிக்கும் அம்மணிகளை உஷார் பண்ணுவதிலேயே கவனம் செலுத்தி வந்தார், பரதேசி நடிகர். தன் மார்க்கெட் தரைமட்டமான போதும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வந்தார்.

தற்போது, தன் தம்பியும் சினிமா களத்தில் குதித்திருப்பதால், ஒருவேளை சினிமா மார்க்கெட்டில் தன்னை அவன் முந்தி சென்று விட்டால், தன்னை கடுமையாக விமர்சனம் செய்வரே என்பதற்காக, திடீரென்று அம்மணிகளின் சகவாசத்தை குறைத்து, நடிப்பில் கவனத்தை திருப்பி இருக்கிறார், பரதேசி நடிகர்.

சினி துளிகள்!

* விஜயதேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த, குஷி படத்திற்கு பின், புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி, 'வெப் சீரியல்'களில் நடித்து வருகிறார், சமந்தா.

* காதலிக்க நேரமில்லை படத்தை அடுத்து, இனிமேல், 'ஆக்ஷன்' மற்றும் அரசியல் கலந்த கதைகளில் கூடுதல் கவனம் செலுத்த போவதாக கூறுகிறார், ரவி மோகன்.

* தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக, தேவரா என்ற படத்தில் நடித்தார், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அதையடுத்து தற்போது, ராம்சரணின், 16வது படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

* மறைந்த, நடிகர் முரளியின் மூத்த மகன், அதர்வா, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் திரைக்கு வந்த, நேசிப்பாயா என்ற படத்தில் நடித்து, முரளியின் இரண்டாவது மகன், ஆகாஷ் முரளியும் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்திருக்கிறார்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us