
மீண்டும் தன், 50வது படத்தை துாசு தட்டும், சிம்பு!
மணிரத்னம் இயக்கிய, தக்லைப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக, இரட்டை வேடத்தில் நடிக்க இருந்த, தன், 50வது படத்தை நிறுத்தி வைத்திருந்தார், சிம்பு. இந்நிலையில் மீண்டும் அந்த படத்தை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
'அந்த படத்தில் நான் நடிக்கப் போவது, ஒரு திருநங்கை வேடம். இதற்கு முன்பு கமலஹாசன், அஜித் போன்றவர்கள் இதுபோன்ற திருநங்கை வேடத்தில் நடித்துள்ளனர் என்றாலும், இந்த படத்தில் அவர்கள் செய்யாத இன்னும் சில புதுமையான, விஷயங்களைச் செய்யப் போகிறோன். அதனால், என்னுடைய, 'கேரியரில்' இது ஒரு முக்கியமான படமாக இருக்கப் போகிறது...' என்கிறார், சிம்பு.
— சினிமா பொன்னையா
திருமணத்திற்கு பிறகும் நடிக்கும், கீர்த்தி சுரேஷ்!
தமிழில் விஜய் நடித்த, தெறி படத்தின் ஹிந்தி, 'ரீ-மேக்'கான, பேபி ஜான் என்ற படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார், கீர்த்தி சுரேஷ். அதையடுத்து, தன் காதலரை திருமணம் செய்து கொண்டவர், மீண்டும் சினிமாவில் நடிப்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது.
தற்போது, பேபி ஜான் படத்தை அடுத்து, ஹிந்தியில், ராஜ்குமார் ராவ் என்பவர் நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், கீர்த்தி சுரேஷ். இந்த படத்திலும், பேபி ஜான் படத்தை போலவே கவர்ச்சியாக நடிக்கவும், 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளார்.
— எலீசா
ரசிகர்களுக்கு, நயன்தாரா கொடுக்கும், 'டபுள் ட்ரீட்!'
தற்போது, நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும், மூக்குத்தி அம்மன்-2 படம், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தில், மூக்குத்தி அம்மன் வேடம் மட்டுமின்றி, ஒரு போலீஸ் வேடத்திலும் நடிக்கிறார், நயன்தாரா.
அம்மன் வேடத்திற்காக, 'சாப்ட்'டான உடற்கட்டு, போலீஸ் வேடத்துக்காக வலுவான உடற்கட்டு என, இப்படத்தில் நடித்து வருவதாக கூறும் நயன்தாரா,'இந்த, மூக்குத்தி அம்மன்- 2படம் என்னுடைய ரசிகர்களுக்கு நான் கொடுக்கும், 'டபுள் ட்ரீட்'டாக இருக்கும்...' என்கிறார்.
— எலீசா
'ஹிட்' பட, 'ஹீரோ'களை துரத்தும், மமிதா பைஜு!
பிரேமலு என்ற மலையாள படத்தில் நடித்து பிரபலமான, நடிகை, மமிதா பைஜூ, தமிழில், ரபேல் படத்தில் அறிமுகமானவர், தற்போது விஜயின், ஜனநாயகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து, 'ஹிட்' படங்களை கொடுத்து வரும், 'ஹீரோ'களுக்கு குறிவைத்து வருபவர், தற்போது, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும், டியூட் என்ற படத்தை கைப்பற்றி இருக்கிறார். இதே வேகத்தில் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பதற்காக, அடுத்தபடியாக, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இன்னும் சில முன்னணி இளவட்ட, 'ஹீரோ'களுடன் நடிப்பதற்கு தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளார்.
— எலீசா
விக்ரமுக்கு அழைப்பு விடுத்த, ராஜமவுலி!
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து, மகேஷ்பாபு நடிப்பில், புதிய படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. இதை பிரமாண்ட வெற்றி படமாக்க வேண்டும் என்பதற்காக, இந்திய மொழிகளில் உள்ள பிரபல நடிகர்களையும் ஒப்பந்தம் செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவிலிருந்து, விக்ரமை அப்படத்தில் நடிக்க வைப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால், உடனடியாக சென்று, ராஜமவுலியை சந்தித்து, 'அக்ரிமென்ட்'டில் கையெழுத்து போட்டு திரும்பி இருக்கிறார், விக்ரம்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
தெலுங்கு நடிகரை தீவிரமாக காதலித்து வந்தார், மாநகரம் நடிகை. ஆனால், அவர் காதலிக்கும் போதே எல்லை மீறியதோடு, ஓராண்டு அம்மணியுடன் குடும்பம் நடத்தி, கழட்டி விட்டு உள்ளார். இதனால், பலத்த அதிர்ச்சி அடைந்துள்ள, அம்மணி, இப்போது யாராவது தன்னிடத்தில், காதல் என, 'லுக்' விட்டாலே, 'இந்த ஆண்களை நம்பி ஏமாறுவதற்கு, 'இனி மேலும் நான் தயாராக இல்லை...' எனச் சொல்லி, ஆரம்பத்திலேயே கத்தரி போட்டு விடுகிறார்.
சினி துளிகள்!
* அஜித்தின், விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்த, ரெஜினா, தற்போது, நயன்தாராவின், மூக்குத்தி அம்மன்- 2 படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
* விக்ரமுக்கு ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்த துஷாரா விஜயனுக்கு, அந்த படம் கை கொடுக்காததால், அடுத்து கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
* ஏற்கனவே தான் நடித்த, மாமன் படத்திற்கு கதை எழுதி இருந்த நடிகர் சூரி, மேலும் தன்னை பாதித்த சம்பவங்களை மையமாக வைத்து, சில கதைகளை எழுதி வருகிறார்.
அவ்ளோதான்!