
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1950ல், அரசியல் நிர்ணய சபையில், நம் நாட்டின் தேசிய கீதமாகத் தேர்ந்தெடுக்க, மூன்று கவிதைகள் ஆராயப்பட்டன.
அது, சர் முஹம்மது இக்பால் எழுதிய, 'சாரே ஜஹான் சே அச்சா...' இரண்டாவது, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, 'ஜன கண மன...' மூன்றாவதாக, பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய, 'வந்தே மாதரம்...'
சாரே ஜஹான் சே பாடலில், சொற்கள் இசைக்கு ஏற்றதாக இல்லை. அடுத்து, வந்தே மாதரம் பாடலில், 'தாயே உன்னை வணங்குகிறேன்...' என்ற வரி வருவது இஸ்லாமியர்களுக்கு ஏற்றதல்ல எனும் காரணத்தால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இறுதியில், தாகூரின், ஜன கண மன... ஏக மனதாக அங்கீகாரம் பெற்றது.
தாகூரின், 'ஜன கண மன...' ஜனவரி 24, 1950ல், தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய தேசிய கீதமான இது பாடப்படும் நேரம், 52 வினாடிகள். இந்தப் பாடல் முதன்முதலில், டிச., 27, 1911ல் நடந்த, இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், இந்தியாவுக்கு வந்தபோது, ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது. இந்த வரவேற்பு கவிதை, வங்காளி மொழியிலிருந்து, சமஸ்கிருதத்துக்கு மாற்றப்பட்டு பின், ஹிந்தி வடிவத்துக்கும், உச்சரிப்பு மற்றும் அர்த்தம் மாறாமல் மற்ற மொழிகளுக்கும் மாற்றப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்ட தேசிய கீதமாக மாறி, புகழ் பெற்றது.