sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மின்னல்!

/

மின்னல்!

மின்னல்!

மின்னல்!


PUBLISHED ON : ஜன 26, 2025

Google News

PUBLISHED ON : ஜன 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்னல் ஏன் எப்போதும் பனைமரம் மீதே விழுகிறது தெரியுமா? அதற்கு ஒரு ஸ்பெஷல் காரணம் இருக்கிறது.

நாம் சிறுவயது முதலே, பனை மரங்களில் இடி விழுவதை பார்த்திருப்போம். பனை மரங்கள், மின்னல் தாக்குதல்களைத் தணிக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது. இது, விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த இயற்கை பாதுகாப்பு பொறிமுறை, வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகள் போன்ற, அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் பாதுகாப்பு அரணாக உள்ளது.

உதாரணமாக, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மின்னல் தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்ளவும், இறப்புகளை குறைக்கவும், அதிகளவில் பனை மரங்களை வளர்க்க, நிதி ஒதுக்கி வருகின்றனர்.

இந்த முயற்சியானது, காலநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அதிகரித்து வரும் மின்னல் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வழிவகுக்கிறது.

மாநிலத்தின் புவியியல் இருப்பிடம் மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவை, குறிப்பாக, மின்னல் தாக்கங்களுக்கு ஆளாகின்றன. கடந்த, 11 ஆண்டுகளில், 3,790 மின்னல் இறப்புகள் பதிவாகியுள்ளன.

மின்னல் தாக்குதல்களை தணிப்பதில் பனை மரங்கள் திறம்பட செயல்பட, முதன்மையான காரணங்களில் ஒன்று, அவற்றின் ஈரப்பதம். பனை மரங்களின் தண்டுகளில் நீர் மற்றும் சாறு நிரம்பியுள்ளது. மின்னல் தாக்கத்திலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி வெளியேற்றும் இந்த ஈரப்பதம், இயற்கையான கடத்தியாக செயல்படுகிறது.

பனை மரங்களின் மற்றொரு சிறப்பு அம்சம், அவற்றின் உயரம். பனை மரங்கள் பெரும்பாலும் சுற்றியுள்ள தாவரங்களை விட உயரமாக வளர்ந்திருக்கும். இதனால், அவைகளில் மின்னல் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஒரு பாதகமாகத் தோன்றினாலும், இது உண்மையில் அருகிலுள்ள மற்ற தாவரங்கள் மற்றும் கட்டமைப்புகளை பாதுகாக்க உதவுகிறது.

பனை மரத்தின் அடர்த்தியான பட்டை மற்றும் கடினமான இலைகள், மின்னல் தாக்குதலின் வெப்பம் மற்றும் சக்தியிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

மின்னல் அதிகம் தாக்கக் கூடிய பகுதியில், நிறைய பனை மரங்களை வளர்த்து, நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவசியம்.

எம்.அசோக்ராஜா






      Dinamalar
      Follow us