PUBLISHED ON : மார் 30, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம், கொல்லம், கொட்டாரக்கரா பகுதியில் வசிக்கும், ஆட்டோ ஓட்டுனரான சுரேஷ், தெரு நாய் ஒன்றுக்கு, குஞ்சன் என, பெயரிட்டு, பாசமாக வளர்த்து வருகிறார். அது, எப்போதும் ஆட்டோ அருகிலேயே படுத்து இருக்கும். சவாரி செய்ய வருபவர்களை உன்னிப்பாக கவனிக்கும்.
சிலர் ஆட்டோவில் பயணிக்க வந்தால், பலமாக குரைத்து ஏறவிடாது. குறிப்பாக, 'குடி'மகன்களை கண்டால், அங்கிருந்து விரட்டி விடும். இதனால், அங்குள்ள, 'குடி'மகன்கள் இந்த ஆட்டோ பக்கமே வருவது இல்லை.
— ஜோல்னாபையன்