sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து: லவங்கப்பட்டை!

/

நம்மிடமே இருக்கு மருந்து: லவங்கப்பட்டை!

நம்மிடமே இருக்கு மருந்து: லவங்கப்பட்டை!

நம்மிடமே இருக்கு மருந்து: லவங்கப்பட்டை!


PUBLISHED ON : மார் 30, 2025

Google News

PUBLISHED ON : மார் 30, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்து, லவங்கப் பொடி - ஒரு தேக்கரண்டி, தேன் - ஒரு தேக்கரண்டி, சுடு தண்ணீர் - இரண்டு தேக்கரண்டி சேர்த்து பிசைந்து, மூட்டு வலி உள்ள இடத்தில் பற்று போட்டால், உடனே வலி குறையும். இதை, தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி முழுமையாக குறையும்.

* லவங்கப் பவுடர் - இரண்டு மேஜைக்கரண்டி எடுத்து, தேன் கலந்து, சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், கடின உணவும் ஜீரணமாகிவிடும்

* சுத்தமான தேன் - ஒரு மேஜைக்கரண்டி, லவங்கப்பட்டை பவுடர் - ஒரு தேக்கரண்டி கலந்து, படுக்க செல்லும் முன் முகத்தில் பூசி, காலை எழுந்தவுடன் வெந்நீரில் கழுவினால், இரண்டு வாரங்களில் முகப்பரு மறைந்து விடும்

* லவங்க பவுடரை, தேனுடன் கலந்து தினமும் காலை, மாலையில் சாப்பிட்டால், உடலில் சக்தி கூடும். தலைமுடியில் தேய்த்து குளித்தால், முடி உதிர்வது நிற்கும்

* சூடான தேன் - ஒரு மேஜைக்கரண்டி, லவங்க பவுடர் - நான்கு தேக்கரண்டி கலந்து, காலை, மாலை என, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டால், சளி, இருமல் மற்றும் சைனஸ் தொல்லைகள் அகலும்

* லவங்க பவுடர், தேன் - தலா ஒரு தேக்கரண்டி கலந்து, பல் வலி உள்ள இடத்தில் தினமும் மூன்று வேளை பூசினால், வலி நீங்கி விடும்

* வயிற்று வலி, அல்சர், வாயு பிரச்னை ஆகியவற்றிற்கு தேன், லவங்கப்பட்டை பவுடர் உட்கொண்டால் குணம் பெறலாம்

* தேனும், லவங்கப்பட்டையும், வெள்ளை ரத்த அணுக்களை பலப்படுத்தும். இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருகும்

* தேன், லவங்கப் பட்டை பவுடரை, ஒரு கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும், இரவில் உறங்க செல்வதற்கு முன்பும், தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்

* லவங்க பவுடர் - ஒரு சிட்டிகை, தேன் - அரை தேக்கரண்டி கலந்து, பல் ஈறுகளில் பூசினால், அது உமிழ்நீருடன் உட்சென்று, மலட்டு தன்மையை நீக்குவதாக கூறப்படுகிறது.

தொகுப்பு: வி. சி. கிருஷ்ணரத்னம்.






      Dinamalar
      Follow us