தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தேவை உணர்ந்து தொழில் தொடங்கினால்...

தேவை உணர்ந்து தொழில் தொடங்கினால்...

தேவை உணர்ந்து தொழில் தொடங்கினால்...


PUBLISHED ON : அக் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

ச மீபத்தில், வெளியூரிலுள்ள என் உறவினரைப் பார்த்து வரச் சென்றிருந்தேன். அவர் வீட்டின் முன், தள்ளுவண்டியில், குழம்பு மற்றும் பொரியல் வகைகளை, சுகாதாரமான முறையில், சுத்தமான பாத்திரங்களில் வைத்து, விற்பனை செய்தனர், ஒரு தம்பதியர்.

பலரும் அவர்களிடம் தங்களுக்கு தேவையான பொரியல் மற்றும் குழம்புகளை, தாங்கள் கொண்டு வந்த ‘டிபன் பாக்சில்’ வாங்கிக் கொண்டு, வேலைக்குச் செல்வதை பார்த்தேன்.

இதுபற்றி உறவினரிடம் விசாரித்தேன்...

அவர், ‘இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் கணவன் – மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், தினமும் காலையில் பிள்ளைகளை கிளப்பி பள்ளியில் விட்டு, அலுவலகம் கிளம்பவே நேரம் சரியாக இருக்கிறது; அவர்களுக்கு சமைக்க நேரம் இல்லை என்பதை அறிந்து, இதே பகுதியில் வசிக்கும் அந்த தம்பதியர், விதவிதமான குழம்பு மற்றும் பொரியல் வகைகளை வீட்டில் சமைத்து, சுயதொழிலாக செய்ய தொடங்கினர்.

‘அதுமட்டுமின்றி, வீட்டு முறையில் அவர்கள் சமைக்கும் உணவு மிகுந்த சுவையாக இருக்கிறது என்ற நற்பெயரும் பெற்று விட்டனர். இதன்மூலம் அவர்கள், வருமானம் ஈட்டி, முன்னேறி வருகின்றனர்...’ என்றார்.

தேவை அறிந்து தொழில் தொடங்கினால், வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்து வரும் அவர்களைப் போல, வேலையில்லாதவர்களும், இதுபோல் ஏதாவது சுயதொழிலை தொடங்கி வாழ்வில் வளர்ச்சியடையலாமே!

— வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us