/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அமெரிக்க நீதிமன்றத்தில், இந்திய நீதிபதி!
/
அமெரிக்க நீதிமன்றத்தில், இந்திய நீதிபதி!
PUBLISHED ON : செப் 08, 2024

அமெரிக்காவின், டெக்சாஸ், ஹூஸ்டன் கவுண்டி 240ம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர், சுரேந்திரன் படேல். படேல் என்பதால் இவர், இந்தியாவின் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்று எண்ண வேண்டாம். இவர் ஒரு மலையாளி.
கேரள மாநிலம் கோழிக்கோடு காஞ்சங்காடு, பளாலி கிராமம் தான், இவரது பூர்வீகம். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர், படித்துக் கொண்டே, பீடி சுருட்டும் பணி, ஹோட்டல் வேலை என, பல வேலைகள் செய்து முன்னுக்கு வந்தார்.
சட்ட மேற்படிப்பை முடித்து, டில்லியில் வேலை தேடி சென்ற போது, அங்கு நர்சாக பணியாற்றி வந்த சுபா என்பவரை, காதலித்து மணம் முடித்தார்.
பிறகு மனைவி அமெரிக்கா சென்றபோது, இவரும் உடன் சென்றார். அங்கும் தன் சட்ட படிப்பை தொடர்ந்தார். எல்லா இன்னல்களையும் தகர்த்து, இன்று, ஹூஸ்டன் கவுண்டி 240ம் மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக இருக்கிறார்.
ஜோல்னாபையன்