/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அமெரிக்க பாடப்புத்தகத்தில் இந்திய நபர்!
/
அமெரிக்க பாடப்புத்தகத்தில் இந்திய நபர்!
PUBLISHED ON : ஜன 05, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசாம் மாநிலத்தில், பல ஆண்டுகளாக, ஏராளமான மரங்களை நட்டு, ஒரு காட்டையே  உருவாக்கியுள்ளார், இயற்கை ஆர்வலரான, ஜாதவ் மொலாய் பாயெங் என்பவர்.
காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து, 1979 முதல், அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றங்கரைப் பகுதியில், பல மரங்களை நட்டு வளர்த்தார். கடந்த பல ஆண்டுகளில், மொத்தமாக, 550 ஹெக்டேர் அளவுக்கு, அசாமில் ஒரு காட்டை உருவாக்கியுள்ளார்.
இவர் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவருகிறது. இருப்பினும், இவருக்கு பெரும் கவுரவம் அளிக்கும் விதமாக, அமெரிக்க பள்ளிப் பாடப்புத்தகத்தில், 'பாரஸ்ட் மேன் ஆப் இந்தியா' என்ற தலைப்பில், இவர் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.
— ஜோல்னாபையன்

