sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 11, 2025

Google News

PUBLISHED ON : மே 11, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிரடி முடிவு எடுங்கள்!

நண்பரின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. இந்நிலையில், அவளை ஏற்கனவே காதலித்தவன், அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அவள் மொபைல் போனுக்கு அனுப்பி, பணம் கேட்டு, மிரட்ட ஆரம்பித்தான்.

அப்பாவிடம், அவள் விஷயத்தை சொல்ல, அந்த புகைப்படத்தோடு மணமகன் வீட்டிற்கு சென்றார், அவர். புகைப்படத்தைக் காட்டி, 'ஒன்றும் அறியாத வயதில், அந்த பையனை என் மகள் காதலித்தது உண்மை தான். அவன் நல்லவன் இல்லை என, மகளுக்கு புத்திமதி சொல்லி, அவனிடமிருந்து விலக வைத்து விட்டோம்.

'மற்றபடி, அவர்களுக்குள் வேறு எந்த தவறும் நடக்கவில்லை. நம்பிக்கை இருந்தால், நல்ல முடிவெடுங்கள். இல்லையென்றால், இந்த திருமணம் வேண்டாம்...' என, மிக தெளிவாக கூறி விட்டார். நண்பரின் வெளிப்படையான பேச்சு, மணமகன் வீட்டாருக்கு பிடித்து விட, 'திட்டமிட்டபடி திருமணம் நடக்கும்...' என, சொல்லி விட்டனர்.

மிரட்டல் காதலனிடம், போலீசில் புகார் அளிப்போம் என்றதும், 'எஸ்கேப்' ஆகிவிட்டான். சில பெண்கள், இப்படிப்பட்ட மிரட்டல்களுக்கு பயந்து, யாரிடமும் கலந்தாலோசிக்காமல், தற்கொலை கூட செய்து கொள்கின்றனர். எனவே, இப்படியான நிலை ஏற்படும் போது, என் நண்பரைப் போன்று, துணிச்சலான அதிரடி முடிவுக்கு வருவதில் தவறில்லை.

— கே.ராஜசேகர், நெல்லை.

வித்தியாசமான கேட்டரிங்!

தற்போது, வீட்டில் இருந்தபடியே அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு, சமையல் செய்து தரும் வேலை செய்து வருகின்றனர், இல்லத்தரசிகள் பலர். எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக, கேட்டரிங் தொழில் ஆரம்பித்தவருக்கு நிறைய, 'ஆர்டர்' வந்தது. அதுபற்றி அவரிடம் கேட்டேன்.

அவர் தயாரிக்கும் முடக்கத்தான் கீரை, வாழைப்பூ போன்றவைகளின் மருத்துவப் பலன்களையும் மெனு போடும் போதே, 'வாட்ஸ்-ஆப்'பில் சேர்த்து பதிவிடுவார். இப்படி ஆரோக்கிய உணவு பற்றித் தெரிந்து கொண்டு, சாப்பிடுவதை எல்லாரும் விரும்புகின்றனர்.

சிலருக்கு எண்ணெயில் பொரிக்கும் உணவுகளை, வெளியில் வாங்கத் தயக்கம் இருக்கும். அவர்களுக்கு வீட்டில், தயாரித்துக் கொள்ள வசதியாக வடை மாவு, அதிரச மாவு மற்றும் முறுக்கு மாவு போன்றவை தயார் செய்து கொடுப்பார்.

வீட்டில் போய் சில நிமிடங்களில் அவர்களே பொரித்துக் கொள்ளலாம். கூட்டு, சாம்பார், பருப்பு உசிலி ஆகியவற்றுக்கு, அவ்வப்போது அரைத்து தயாராகயிருக்கும் கலவையை கொடுக்கிறார். மேலும், தேங்காய் துருவும் மிஷின், காய்கறி வெட்டும் இயந்திரம் இருப்பதால், தேவைக்கேற்ப தேங்காய் துருவல், காய்களை வெட்டித் தருவது ஆகியவையும் செய்கிறார். நேரத்தை மிச்சப்படுத்த, இப்படி மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டால், எந்தத் தொழிலையும் வெற்றிகரமாக நடத்தலாம் இல்லையா!

— மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.

லிப்ட் கொடுக்கப் போகிறீர்களா... உஷார்!

ஒருநாள் மாலை, தன் காரில் வெளியூர் சென்று கொண்டிருந்தார், என் நண்பர். வழியில், சாலையோரம் நின்றிருந்த ஒரு நபர், காரை நிறுத்தச் சொல்லி சைகை செய்துள்ளார்.

அவர் அருகில் நிறுத்தி விசாரித்த போது, 'என் மனைவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெகுநேரமாக பேருந்து வரவில்லை. எங்களுக்கு, 'லிப்ட்' கொடுத்து, போகும் வழியிலுள்ள மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட முடியுமா?' என, கெஞ்சியுள்ளார்.

நண்பர், மனிதாபிமானத்துடன் உதவ முடிவு செய்து, அவர்களை காரில் ஏற்றிக் கொண்டுள்ளார். மருத்துவமனை வந்ததும், அவர்களை இறக்கி விட்டு விட்டுப் புறப்பட்டுள்ளார். சிறிது துாரம் சென்றவுடன், அவருடைய உள்ளுணர்வு உந்த, காரை ஓரமாக நிறுத்தி, பின்புற சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பையை சோதித்துள்ளார்.

அவர் நினைத்தது போலவே, அந்த பையில் வைக்கப்பட்டிருந்த, 'லேப்டாப்' மற்றும் பணம் உள்ளிட்டவற்றை, 'லிப்ட்' கேட்டு வந்த மோசடி நபர் திருடிக் கொண்டு போயிருந்தார். அதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வாசகர்களே... எவ்வளவு அவசரமாகத் தோன்றினாலும், அந்நியர்களை நம்புவதற்கு முன், எச்சரிக்கையாக இருங்கள். மோசடி கும்பல்கள், நம் கவனத்தை திசை திருப்பி திருடுவதில் வல்லவர்கள். 'லிப்ட்' கொடுக்கும் போது, உஷாராக இருங்கள்!

— விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.






      Dinamalar
      Follow us