
அவல் பொரி உருண்டை!
தேவையானவை: கெட்டி அவல் - 500 கிராம், பாகு வெல்லம் - 500 கிராம், நறுக்கிய தேங்காய் - கால் கப், சுக்கு பவுடர் - அரை தேக்கரண்டி, ஏலத்துாள் - ஒரு தேக்கரண்டி, தண்ணீர் -- இரண்டு கப், நெய் - சிறிதளவு.
செய்முறை: சுத்தம் செய்த அவலில், நெய்யில் வறுத்த தேங்காய், ஏலத்துாள் மற்றும் சுக்குப் பொடி சேர்க்கவும். கம்பிப் பதம் வந்த வெல்லப்பாகை, கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும்.
பொரி விளங்காய் உருண்டை!
தேவையானவை: கடலை பருப்பு - 250 கிராம், பயத்தம் பருப்பு - 250 கிராம், வெல்லம் - 500 கிராம், ஏலத்துாள் மற்றும் நெய் - சிறிதளவு.
செய்முறை: பருப்புகளைத் தனித்தனியாக வறுத்து பொடியாக்கவும். இளம் வெல்ல பாகில், ஏலத்துாள் கலந்து, பொடித்த பருப்பு வகைகளை சேர்க்கவும். கையில் நெய்யைத் தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.