sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: அறிவின் திறவுகோல்!

/

கவிதைச்சோலை: அறிவின் திறவுகோல்!

கவிதைச்சோலை: அறிவின் திறவுகோல்!

கவிதைச்சோலை: அறிவின் திறவுகோல்!


PUBLISHED ON : செப் 01, 2024

Google News

PUBLISHED ON : செப் 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எட்டாக்கனியையும்

எட்டிப்பறிக்க வைத்திருப்பாரே...

ஏழ்மை நிலையை

தவிடு பொடியாக்க வைக்கும்

வித்தையை கற்று

கொடுத்திருப்பாரே!

* தேசத் தலைவர்களையும்

விரல் பிடித்து

வழி நடத்திச் சென்றிருப்பாரே...

தேசம் என்ற உணர்வையும்

தன் விரல் கொண்டு பிசைந்து

ஊட்டியிருப்பாரே!

* அமிர்தமெது நஞ்செதென

பிரித்தறியச் செய்திருப்பாரே...

அன்னையும் பிதாவும்

முன்னறி தெய்வமென

அனைவரின் உணர்விலும்

ஏற்றியிருந்திருப்பாரே!

* உலகம் உருண்டை என்றென

உணர வைத்திருப்பாரே...

ஒன்றே குலமெனவும்

ஒருவனே தேவனெனவும்

காதுகளில் ஓதியிருப்பாரே!

* முயற்சி தன் மெய்வருத்த

கூலி தருமென

முயல வைத்திருப்பாரே...

நம்பிக்கை சிறகுகளை

தோள்களில் கட்டி வானில்

ஏற்றி விட்டிருப்பாரே!

* தூணிலும் இருப்பான்

கடவுளென

தெளிவூட்டி இருப்பாரே...

பிச்சைப் புகினும் கற்கை நன்றென

எடுத்துரைத்திருப்பாரே!

* எழுத்து அறிவித்தவன் இறைவன்

என்ற பட்டத்தை தாங்கியும்

தலைக்கனமில்லாமல்

தரணியில் வலம் வந்து

கொண்டிருக்கும்

ஆசிரியர் அவரே!

- மு.கவுந்தி. சென்னை






      Dinamalar
      Follow us