sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - வரம்!

கவிதைச்சோலை - வரம்!

கவிதைச்சோலை - வரம்!


PUBLISHED ON : செப் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மறதியே வா...

என்னை உன் வசமாக்கிக் கொள்...

உன் அரவணைப்பில் தான்

நிம்மதி கிடைக்குமென்றால்

உன்னை நான் விடப்போவதில்லை!

* அறியா வயதில்

தெரிந்தும் தெரியாமலும்

செய்த தவறுகளை

என்னிடமிருந்து மறக்க செய்ததால்

குற்ற உணர்ச்சி இல்லாமல்

வாழ முடிகிறது!

* பருவ வயதில்

எனக்கு ஏற்பட்ட

புறக்கணிப்புகள்

ஏமாற்றங்கள்

மறதியால் மூழ்கடிக்கப்பட்டதும்

வாழ்க்கை பிடிப்பட்டது!

* கல்லுாரி நாட்களில்

நண்பர்களுடன் ஏற்பட்ட

வார்த்தை சண்டைகளும், மோதல்களும்

மறக்கடிக்கப்பட்டதால்

இனிய நட்பை தொடர முடிகிறது!

* குடும்ப வாழ்க்கையில்

உறவுகளுக்குள் ஏற்பட்ட

நெருடல்கள் மனக் கசப்புகள்

மறதி எனும் வரத்தால்

இன்றும் இனிதாக உறவாட முடிகிறது!

* வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்

செய்த தவறுகளும்

மன உளைச்சல்களும்

மறதியால் மறந்து போனதால்

தெளிவான மனதுடன்

அனைவருடனும் அளவளாவ முடிகிறது!

* மீதமுள்ள வாழ்நாளையும்

பக்குவப்பட்ட மனதுடன் வாழ

உறவுகளுடனும், நட்பு வட்டத்துடனும்

இனிமையாக பயணிக்க மறதியே வா!

* மறதி நோயல்ல - அது இனிய வரம்!

செல்வி நடேசன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us