sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை - விரும்பாதே!

/

கவிதைச்சோலை - விரும்பாதே!

கவிதைச்சோலை - விரும்பாதே!

கவிதைச்சோலை - விரும்பாதே!


PUBLISHED ON : அக் 06, 2024

Google News

PUBLISHED ON : அக் 06, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முயற்சிக்காமல் கிடைத்திடும்

வெற்றியை விரும்பாதே - அது

யாராலும் மதிக்கப்படாது!

உழைக்காமல் பெற்றிடும்

ஊதியத்தை விரும்பாதே - அது

நற்காரியத்திற்கு செலவாகாது!

சுயநலமாக வாழ்ந்திடும்

வாழ்க்கையை விரும்பாதே - அது

அர்த்தமுள்ளதாக இருக்காது!

குறுக்கு வழியில் வாங்கிடும்

பதவியை விரும்பாதே - அது

மாண்பை சேர்க்காது!

வற்புறுத்தி இணைத்திடும்உறவுகளை விரும்பாதே - அது

ஆயுளுக்கும் நிலைக்காது!

மோசடியில் அடைந்திடும்

வளர்ச்சியை விரும்பாதே - அது

நீண்ட நாள் தொடராது!

அச்சுறுத்தி அனுபவித்திடும்

மகிழ்ச்சியை விரும்பாதே - அது

அன்றாடம் கிடைக்காது!

அதிகாரத்தால் வந்திடும்

நன்மைகளை விரும்பாதே - அது

நற்பெயரைக் கொடுக்காது!

—  இந்திராணி ஆறுமுகம், கடலுார்.






      Dinamalar
      Follow us