PUBLISHED ON : அக் 20, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேர்மறை எண்ணங்கள்
என்றுமே தோற்பதில்லை
எதிர்மறை எண்ணங்கள்
உன்னுள் சிக்காதவரை!
எதுவும் கடந்து போகும்
எண்ணம் விதையுங்கள்
மீளாத துயரமும் கரைந்து
போக எத்தனிக்கும் மனம்!
முடக்கும் எதிர்மறை
எண்ணங்கள் தவிருங்கள்
இயக்கும் நேர்மறை
எண்ணங்கள் சூடுங்கள்!
உயர்ந்த எண்ணங்களில்
உறக்க சிந்தியுங்கள்
அதுவே வாழ்க்கையில்
உயர்வின் வழிகாட்டி!
நேர்மறை எண்ணங்கள்
மையமிடும் உள்ளத்தில்
வாழ்வின் முன்னேற்றம்
வடிவமாக உருவாகிறது!
சொல்லிலும் செயலிலும்
பதிவிடும் நல் எண்ணமே
நாளைய சாதனைக்கான
தொடக்கத்தின் ஆதாரம்!
நேர்மறை சிந்தனையில்
மன அழுத்தம் குறையும்
அதன் சக்தி உடலுக்கும்
மனதிற்கும் வலுசேர்க்கும்!
விவேகமாக செயல்படும்
சிந்தனை தொடக்கமே
தோல்வி நிலையானதல்ல
என்பதை உணர்த்தும்!
— வி.சுவாமிநாதன், சென்னை.