sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : அக் 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சிறிது சோடா உப்பையும் கலந்து குடித்தால், வயிற்று வலி நீங்கும்.

* அகத்திக்கீரையில், 65 விதமான சக்திகள் அடங்கி இருக்கின்றன. மலச்சிக்கல், பித்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். வெயிலில் அலையும் வேலை உடையவர்களும், காபி, டீ சாப்பிடுபவர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*    வேப்பிலை, மருதாணி, மஞ்சள் ஆகிய மூன்றையும் அரைத்து குதிகால் வெடிப்பில் பூசி வந்தால், பித்த வெடிப்பு குணமாகும். இரவு படுக்க போகும்போது, இந்த மருந்தை போடுவது நல்லது.

* உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. மூட்டு வலிக்கிறது என்று சொல்பவர்கள், தேங்காய் எண்ணெயில் கற்பூர கட்டியை சிறிதளவு போட்டு கலக்கி, சூடுபடுத்திய பிறகு மூட்டுகளில் பூசி வந்தால், கீல் வாத வலி, மூட்டு வலி குணமாகும்.

*    கறிவேப்பிலையை துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தை போக்கும். சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை குடித்து வந்தால், பித்தம் ஏற்படாது.

*    செம்மண்ணை தண்ணீரில் கரைத்து அடுப்பில் சுட வைத்தால், கெட்டியாக சூடாக இருக்கும். இந்த மண்ணை காலில் வீக்கம் உள்ள இடத்தில் கை பொறுக்குமளவு சூடாக எடுத்து, இரவு நேரத்தில் பூச வேண்டும். காலையில் வீக்கம் குறைந்து காணப்படும். இரண்டு மூன்று முறை போட்டால், பூரண குணமடையும். இது, யானைக்கால் உள்ளவர்களுக்கு பொருந்தாது. திடீர் வீக்கம், இடிபட்ட வீக்கம் இவைகளுக்கு மட்டும் பொருந்தும். கடையில் விற்கும் காவியில் போடக் கூடாது, செம்மண்ணில் தான் போட வேண்டும்.

* ஒரு தேக்கரண்டி மிளகு துாள், சிறிதளவு இஞ்சி, ஒரு பிடி துளசி இலை சேர்த்து கஷாயம் போல் செய்து சர்க்கரை, பால் சேர்த்து அருந்த, தொண்டை வலி, சாதாரண ஜுரம் ஆகியவை குணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us