/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
/
கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
PUBLISHED ON : நவ 10, 2024

குழந்தைகளே
நாட்டின் கண்கள்
இவர்களை கொண்டாடும் நாடே
எதிர்காலத்தில் வளமடையும்!
குழந்தைகளே
நாட்டின் துாண்கள்...
ஊட்டச்சத்து
குறைபாடின்றி வளர்ப்பது
பெற்றோர்கள்
அரசின் கடமையாகும்...
துாண்கள் வலிமையானால்
எதிர்காலம் வசந்தமே!
குழந்தைகளே
நாட்டின் ஒளி...
பாலினப்பாகுபாடின்றி
கல்வி ஒளி ஏற்றி வைத்தால்
நாட்டிற்கு என்றும் ஏற்றமே!
குழந்தைகளேநாட்டின் வேர்கள்...
இளவயது
திருமணங்களால்
வேர்கள் அழுகிவிடுகின்றன
வலிமையான வேர்களே
நாட்டை நிமிரச் செய்யும்!
குழந்தைகளே
நாட்டின் அச்சாணி...
குழந்தைகளை
பாதுகாத்து
துாக்கி வைத்துக்
கொண்டாடாத சமூகம்
அச்சாணி இல்லா
தேராகக் கவிழுமே!
* குழந்தைகள் தினத்தில் மட்டுமல்ல
ஒவ்வொரு நாளும்
குழந்தைகளைக் கொண்டாடி
உடலும், மனமும்
ஆரோக்கியமாக
இருப்பதை உறுதி செய்வோம்...
உற்சாகமாக பறக்க
ஊக்குவிப்போம்!
— வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.