
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெறுங்கையோடு
இருந்தாலும்
புன்னகையோடு
இருங்கள்
விமர்சனங்கள் குறையும்!
பொன் நகை
இல்லாவிட்டாலும்
புன்னகையோடு
இருங்கள்
பகை குறையும்!
மரியாதை
கிடைக்காவிட்டாலும்
புன்னகையோடு
இருங்கள்
அலட்சியம் குறையும்!
தடுக்கி விழுந்தாலும்
தடுக்கப்பட்டாலும்
புன்னகையோடு
இருங்கள்
எதிர்ப்பு குறையும்!
சூழ்ச்சிகளால்
சூழப்பட்டாலும்
புன்னகையோடு
இருங்கள்
இடையூறு குறையும்!
கோடான கோடி
இதயங்கள்
நலம் பெறும்...
சர்க்கரை நோயும்
ரத்தக் கொதிப்பும்
சிரித்தபடி
வெளியேறும்!
கைவசம்
வைத்திருப்போம்
எப்போதும்
ஒரு கிலோ
புன்னகையை!
— சு.பிராபகர், மதுரை.