
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெர்மனி நாட்டிலிருந்து இருந்து நெதர்லாந்து போகும் பாதையில் இருக்கிறது, ப்ளாக் பாரஸ்ட் என்ற இடம். இங்குள்ள மண்ணில் இரும்பு தாது கூடுதலாக இருப்பதால், மரங்களின் நிறம் கறுப்பாக இருக்கும். எனவே, இப்பகுதி, கறுப்பு காடுகள் என அழைக்கப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற, குக்கூ கடிகாரங்கள் இந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது. வித்தியாசமான இந்த கடிகாரங்கள் வாங்க, பல நாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். குக்கூ கடிகாரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இங்கு தான் அமைந்துள்ளது.
— ஜோல்னாபையன்