PUBLISHED ON : டிச 01, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எத்தனை நிறங்களில் மனிதர்கள்
அத்தனை புதியது உணர்வுகள்
அடையாளம் கண்டுக்கொள்ள
முடியாமல் மறைக்கும் முகமூடிகள்!
சிரிப்பை ஏந்தும் முகங்களும்
விஷ வார்த்தைகள் கொண்டு தாக்கலாம்
சிந்தனை கோர்த்த முகங்களும்
சில்லறையாக நடக்கலாம்!
பெரியவர் இவர் என வணங்கினால்
சிறுமை குணங்கள் வெளிப்படும்
அருமை என்று நினைத்தவர்
வெறுமை என்றும் தெரியலாம்!
கடுமை காட்டும் முகம் என
தள்ளிக் கொஞ்சம் போகையில்
உள்ளம் பொன் என உணரலாம்!
ஊர் மெச்சும் குணங்களை காணலாம்கல்லுாரி பாடங்கள் புரியலாம்
மனதின் கோலங்கள் புரிவதில்லை
எத்தனை பாடங்கள் படித்தாலும்
மனிதனை உணர்வதும் இல்லை!
உறவோ, நட்போ இறுதி வரை
தொடர்ந்தால் மனதிற்கு ஆறுதல்
மனித வண்ணங்கள் பலவானாலும்
வானவில்லாய் வாழ்க்கை சுகமே!
— அகிலா ஜ்வாலா, சென்னை.