/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - ஒவ்வொன்றும் சிறந்ததே!
/
கவிதைச்சோலை - ஒவ்வொன்றும் சிறந்ததே!
PUBLISHED ON : டிச 29, 2024

உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு நாளும்
சிறந்த நாளென்று!
உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு நேரமும்
சிறந்த நேரமென்று!
உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு வேலையும்
சிறந்த வேலையென்று!
உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு உறவும்
சிறந்த உறவென்று!
உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு நட்பும்
சிறந்த நட்பென்று!
உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு உதவியும்
சிறந்த உதவியென்று!
உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு நன்றியும்
சிறந்த நன்றியென்று!
உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு தருமமும்
சிறந்த தருமமென்று!
உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு முயற்சியும்
சிறந்த முயற்சியென்று!
உங்கள் இதயத்தில்
எழுதிக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு மகிழ்ச்சியும்
சிறந்த மகிழ்ச்சியென்று!
— வி.சி.கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு.