PUBLISHED ON : பிப் 02, 2025

* எல்லாமே உன்னாலே...
நீ குடிசையில் இருப்பதும் கோபுரத்தில் வாழ்வதும்
பணக்காரனாக இருப்பதும் ஏழையாக மடிவதும்
எல்லாமே உன்னாலே தான்!
* நீ அறிவாளியாக ஆவதும் முட்டாளாக வாழ்வதும்
தலைவனாக இருப்பதும் தறுதலையாக போவதும்
எல்லாமே உன்னாலே தான்!
* நீ தொண்டு செய்வதும் சுயநலமாய் சீரழிவதும்
திருடனாய் மாறுவதும் புனிதனாய் ஆவதும்
எல்லாமே உன்னாலே தான்!
* நீ கோபத்தில் வாளேந்துவதும்
கொலைகாரனாவதும் பொறுமையாய் இருப்பதும்
குடும்பத்தை காப்பதும்
எல்லாமே உன்னாலே தான்!
* நீ நல்லோர் ஆட்சியை தேர்ந்தெடுப்பதும்
தீயோர் ஆட்சியை தேர்ந்தெடுப்பதும்
சரித்திரத்தில் பேர் வாங்குவதும்
சாதனைகள் படைப்பதும்
எல்லாமே உன்னாலே தான்!
* நீ மகாத்மா காந்தியாவதும்
கொடூரமான ஹிட்லர் ஆவதும்
சேவை செய்வதும் சிறப்புடன் வாழ்வதும்
எல்லாமே உன்னாலே தான்!
* உன் வாழ்க்கையை
எப்படி தீர்மானிக்கிறாய் என்பது
உன் கையில் தான் உள்ளது!
* உன் மனதில் என்ன நினைக்கிறாயோஅதுவே நடக்கும்
சரியான முடிவுகள் சரியான திட்டங்கள்
உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்
உன் வாழ்க்கை உன் கையில் தான்!
- எம்.பாலகிருஷ்ணன், மதுரை.