sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!

/

கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!

கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!

கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!


PUBLISHED ON : ஏப் 06, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முயற்சியின் தொடக்கம்

தோல்வி என்றால்

விடாமுயற்சியின் முடிவு

வெற்றியின் ஆரம்பம்!

* பயமும் தயக்கமும்

நம்மிடம் இல்லை என்றால்

செயலும் பாதையும் ஒரே

நேர்க்கோட்டில் செல்லும்!

* ஊக்கமும் திறமையும்

உள்ளத்தில் வேரானால்

சாதிக்கும் சக்திகள்

ஆல விருட்சமாக வளரும்!

* நிதானமும் எளிமையும்

இரு கண்களானால்

என்னாளும் வாழ்க்கை

சிக்கலாக மாறாது!

* எதிர்கால லட்சியத்தை

வலுவாக முயற்சி செய்

அதை செய்து முடிக்கும்

மனஉறுதி தானே வரும்!

* சிந்தித்து செயல்படும்

ஆற்றலை உறுதி செய்

அதுவே மிகச் சிறந்த

வெற்றியின் நம்பிக்கை!

* பொறுமையும் மவுனமும்

பகைமை வீழும் ஆயுதம்

தேவையான நேரங்களில்

கடைபிடிக்க முயற்சி செய்!

* தோல்வி நிரந்தரமல்ல

காரணத்தை தேடாதே

வெற்றியின் காரணிகள்

கண்டறிய முயற்சி செய்!

* உயர்வு மூச்சு என்றால்

இலக்கை சுவாசம் செய்

அஞ்சாமை தடம் பதித்து

ஆற்றும் திறன் பதிவிடு!

* சில படிப்பினைகள்

உள்ளத்தில் வலி தரலாம்

அதை வலிமையோடு

அனுபவமாக மாற்றிவிடு!



—வி.சுவாமிநாதன், சென்னை.

மொபைல் எண் : 93603 83220







      Dinamalar
      Follow us