/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: நாளும் நன்றி சொல்வோம்!
/
கவிதைச்சோலை: நாளும் நன்றி சொல்வோம்!
PUBLISHED ON : மே 11, 2025

அன்பையும்
பண்பையும்
அன்றாடம் சொல்லித்தரும்
அம்மாவிற்கு நன்றி சொல்வோம்!
அறிவையும்
அறநெறியையும்
அவ்வப்போது சொல்லித்தரும்
அப்பாவுக்கு நன்றி சொல்வோம்!
பாசத்தையும்
நேசத்தையும்
பண்போடு சொல்லித்தரும்
பாட்டிக்கு நன்றி சொல்வோம்!
தானத்தையும்
தர்மத்தையும்
தவறாமல் சொல்லித்தரும்
தாத்தாவுக்கு நன்றி சொல்வோம்!
எண்ணத்தையும்
எழுத்தையும்
இடைவிடாமல் சொல்லித்தரும்
இறைவனுக்கு நன்றி சொல்வோம்!
நேர்மையையும்நியாயத்தையும்
நித்தமும் சொல்லித்தரும்
நீதி தேவதைக்கு நன்றி சொல்வோம்!
சத்தியத்தையும்
சமாதானத்தையும்
சரிவர சொல்லித்தரும்
சான்றோருக்கு நன்றி சொல்வோம்!
உழைப்பையும்
உண்மையையும்
உறுதியுடன் சொல்லித்தரும்
உத்தமர்களுக்கு நன்றி சொல்வோம்!
நன்மைகளையும்
நலங்களையும்
நல்வழியில் சொல்லித்தரும்
நல்லவர்களுக்கு
நாளும் நன்றி சொல்வோம்!
— க. அழகர்சாமி, கொச்சி.
தொடர்புக்கு : 94954 67076