sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: வீட்டை காக்கும் காவலர்!

கவிதைச்சோலை: வீட்டை காக்கும் காவலர்!

கவிதைச்சோலை: வீட்டை காக்கும் காவலர்!


PUBLISHED ON : ஜூன் 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 15 - தந்தையர் தினம்

ஊரை காப்பவர்

அய்யனார் சாமி

என்றால், வீட்டை

காப்பவர் தந்தை தான்!

நாட்டை காப்பது

மன்னர் என்றால்

வாழும் குடும்பத்தை

காப்பவர் தந்தை தான்!

தோட்டத்தை காப்பவர்

காவலாளி என்றால்

குடும்பத்தை காப்பவர்

தந்தை தான்!

காட்டை காப்பது

சிங்கம் என்றால்

வீட்டை காப்பது

தந்தை தான்!

நாட்டின் எல்லையை

காப்பது ராணுவ

வீரர் என்றால் குடும்பத்தை

காப்பவர் தந்தை தான்!

கண்களை காப்பது

இமை என்றால்

குடும்பத்தை

காப்பது தந்தை தான்!

கட்டடங்களை

தாங்குவது

துாண்கள் என்றால்

வீட்டை தாங்குவது

தந்தை தான்!

வீட்டின் தலைவனே

முதன்மையானவர்

இவரே குடும்பத்தை

தாங்கும் துாண்கள்!

வீட்டையும், குடும்பத்தையும்

தாங்கும் தலைவனான

தந்தை இவரே

உண்மையான குடும்பத்தின்

கதாநாயகன்!

அவர் பெற்ற பிள்ளைகளுக்கு

பாதுகாக்கும் தடுப்பு

சுவராய் இருப்பவர்

குடும்பத்தின் ஆணி

வேராய் காப்பவர்!

தந்தையின் உழைப்பின்

வியர்வையால் குடும்பத்தின்

மகிழ்ச்சி விதைகள்

வளர்ந்து நறுமண

பூக்களாகின்றன!



— எம்.பாலகிருஷ்ணன், மதுரை.

தொடர்புக்கு: 99445-65266


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us