
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தவறு செய்யும்
வாய்ப்பிருந்தும்
அதைத் தவிர்ப்பவனே
நல்லவன்!
அறிவை அறிவாலும் சூழ்ச்சியை சூழ்ச்சியாலும்
வெல்லத் தெரிந்தவனே
வல்லவன்!
தெருவுக்குத் தெரு
கடை இருப்பினும்
குடிக்காதவனே நல்ல
குடிமகன்!
ஓட்டுரிமையை காசு பொருளுக்கு
விற்காதவனே சிறந்த
வாக்காளன்!
வறுமையிலும்
சிறுமை புரியாது
வாழ்பவனே
மாவீரன்!
முடிந்தவரையிலும் முடியாத போதும்
உதவ ஓடி வருபவனே
நண்பன்!
எந்த நிலையிலும்
அன்னை தந்தையை
காக்கின்றவனே
தவப்புதல்வன்!
வாய்மையும்
நேர்மையும் சேர
வாழ்பவனே
மனிதன்!
தீமை செய்தோர்க்கும்
நன்மை செய்துவிட்டு
அதை மறப்பவனே
புனிதன்!
தேசமும், தெய்வமும்
இரு கண்களெனப்
போற்றுபவனே
இந்தியன்!
— அ.கங்காதரன், புதுச்சேரி.

