sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!


PUBLISHED ON : ஆக 25, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய் அப்பம்!

தேவையானவை:

கோதுமை, பொடித்த வெல்லம் - தலா 100 கிராம், பச்சரிசி, தேங்காய் துருவல் - தலா இரண்டு தேக்கரண்டி, நெய் - 100 மில்லி, சிறிதளவு ஏலக்காய்துாள்.

செய்முறை:

கோதுமையுடன், பச்சரிசி சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும். பின்னர், வடிகட்டிய அரிசி, கோதுமையுடன், வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும். பின் ஏலக்காய்த்துாள் கலந்து கொள்ளவும்.

அடுப்பில் பணியாரக்கல்லை சூடாக்கி, எல்லாக் குழிகளிலும் சிறிதளவு நெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கத்தை திருப்பி போடவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். நெய் மணத்துடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த அப்பம்!



கை முறுக்கு!


தேவையானவை:

பச்சரிசி - 200 கிராம், வெண்ணெய் - 50 கிராம், சீரகம் - ஒரு தேக்கரண்டி, வறுத்து அரைத்து சலித்த உளுந்து மாவு - இரண்டு தேக்கரண்டி, பெருங்காய்த்துாள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியை, மூன்று மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து, மிக்ஸியில் பொடித்து சலிக்கவும். இந்த மாவை அகலமான பாத்திரத்தில் போட்டு, அதனுடன் வெண்ணெய், உளுந்து மாவு, சீரகம், உப்பு, பெருங்காயத்துாள் சேர்க்கவும்.

பின்னர், மாவை கொஞ்சம் கெட்டியாகப் பிசைந்து, சுத்தமான வெள்ளைத் துணியை பரப்பவும். பிசைந்த மாவை கையில் எடுத்து, விரல் இடைவெளி வழியாக மெல்லிய இழைகளாக முறுக்கிச் சுற்றவும். பின்னர், அதை சூடான எண்ணெயில் போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

திரட்டுப் பால்!

தேவையானவை:

பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 150 கிராம்.

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாலை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். 250 மில்லி அளவு பால் சுண்டி கெட்டியானதும், சர்க்கரையை சேர்த்து, கோவா பதம் வரும் வரை கெட்டியாக கிளறி இறக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us