
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?
நல்லதொரு மேடை அமைத்து, அதில் ஆசனம் போட வேண்டும். அதன் மேல் பட்டுத் துணி விரித்து, நுனி வாழை இலை வைத்து, அரிசி பரப்பி கலசம் வைக்க வேண்டும். வெள்ளி அல்லது தங்கக் காசை கலசத்தினுள் போட்டு, சுத்த ஜலம் விட்டு முறைப்படி பூஜிக்க வேண்டும் அல்லது லட்சுமி குபேர எந்திரம் வைத்து பூஜிக்கலாம். வருடா வருடம் தொடர்ந்து லட்சுமி குபேரனை பூஜிப்பதால் செல்வம் சேரும்.
முதலில், விநாயகர் பூஜை செய்துவிட்டு, அதன் பின் நவகிரகங்களை ஆராதனை செய்ய வேண்டும். அதன் பின், லட்சுமியை பூஜித்து, குபேரனையும் பூஜிக்க வேண்டும். வாசனைப் பூக்களால் அர்ச்சித்து, பலவித பட்சணங்களை நைவேத்தியம் செய்யலாம்.

