/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - அதிமதுரம்
/
நம்மிடமே இருக்கு மருந்து - அதிமதுரம்
PUBLISHED ON : ஆக 11, 2024

ஏராளமான மருத்துவ பலன்களைத் தரக்கூடிய சிறந்த மூலிகை, அதிமதுரம். இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதினருக்கும் பயன் தரக்கூடியது.
அதிமதுரத்தை பொடியாக்கி, நீரில் கலந்து வெறும் வயிற்றில், குடித்துவர, குடல் புண் சரியாகும். மேலும், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ஏற்படும் அல்சர் புண்களும் குணமடையும்.
தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வர விடாமல் தடுக்கிறது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம், சிறந்த வரப்பிரசாதம். மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு மீண்டும் வராமல், இந்த அதிமதுர மூலிகை தடுக்கிறது.
தினமும், காலை, மாலை என, இரு வேளை, அதிமதுர துாள் கலந்த நீரை ஆண்கள் எடுத்துக் கொள்வது நல்லது. ஊற வைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆண்களுக்கு இருக்கும், ஆஸ்துமா, இளநரை, ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களை சரிசெய்கிறது.
ஊறவைத்த அதிமதுர துாளை பருகி வருவதால், மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும் வாதத்தன்மை குறையும். சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க துணை நிற்கும், அதிமதுரம்.
தொகுப்பு: மு.நாகூர்.