sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து - ஓமம்!

/

நம்மிடமே இருக்கு மருந்து - ஓமம்!

நம்மிடமே இருக்கு மருந்து - ஓமம்!

நம்மிடமே இருக்கு மருந்து - ஓமம்!


PUBLISHED ON : அக் 13, 2024

Google News

PUBLISHED ON : அக் 13, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமத்தை, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் சேர்த்து, காலை வேளையில் அருந்தி வர, உடல் பலம் பெறும். 100 கிராம் ஓமத்தில், 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து குடித்தால், அஜீரணக் கோளாறு சரியாகும்.

* ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கரகாரம் மற்றும் திப்பிலி வேர் பொடியை சம அளவு எடுத்து, அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து, காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட, தொண்டையில் புகைச்சல் நீங்கும்.

*     ஓமம், சுக்கு, சித்திர மூல வேர்ப்பட்டை சம பங்கு பொடித்து, கடுக்காய் பொடி சேர்த்து, மோரில் கலந்து குடித்து வர, மந்தத்தைப் போக்கும்.

* ஓம கஷாயம் அருந்தினால், பசியை துாண்டும்.

* ஜலதோஷம் குறைய, ஓமத்தை பொடித்து, உச்சந்தலையில் வைத்து தேய்க்கலாம்.

* ஓமப் பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால், மூக்கடைப்பு நீங்கும்.

* ஓம எண்ணெயை மூட்டு வலிக்கு தடவ, நாளடைவில் வலி குணமாகும்.

* ஓம எண்ணெயை, பஞ்சில் தோய்த்து, பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால், வலி நீங்கும்.

* ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்க வேண்டும். உணவு உண்ட, 20 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுக் கடுப்பு சரியாகும்.

சவுமியா சுப்ரமணியன்






      Dinamalar
      Follow us