தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: பாதாம் பிசின்

நம்மிடமே இருக்கு மருந்து: பாதாம் பிசின்

நம்மிடமே இருக்கு மருந்து: பாதாம் பிசின்


PUBLISHED ON : ஏப் 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 06, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதாம் பிசின், பாதாம் மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கையான பிசின். இது, பாரம்பரியமாக பல்வேறு உணவுகள் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நாட்டு மருந்து கடைகள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பாதாம் பிசின் கிடைக்கும்.

பாதாம் பிசினை ஊறவைத்து உட்கொள்ளலாம் அல்லது உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.

ஒரு தேக்கரண்டி அளவு பாதாம் பிசினை, இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில், பிசின், தண்ணீரை உறிஞ்சி, ஜெல்லி போன்ற பொருளாக விரிவடைந்திருக்கும். இந்த ஜெல்லியை அப்படியே உட்கொள்ளலாம்.

ஜிகர்தண்டா போன்ற பல்வேறு பானங்கள் மற்றும் இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.

கெட்டியான பாலில், ஊறவைத்த பாதாம் பிசின், நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சியையும், ஊட்டச்சத்தையும் தரும்.

ஆண் மலட்டுத்தன்மை உடையவர்கள், இளஞ்சூடான பசும்பாலில், பாதாம் பிசின் கலந்து தினமும் குடித்து வரலாம்.

பாதாம் பிசின் அதிகமாக சாப்பிடுவது வயிறு உப்புசம், வாயு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, பாதாம் பிசினை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, ஒரு நாளைக்கு ஒரு முறை உட்கொள்வது போதுமானது.

- எஸ்.ரஸிதா பீவி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us