தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: தேங்காய் பூ!

நம்மிடமே இருக்கு மருந்து: தேங்காய் பூ!

நம்மிடமே இருக்கு மருந்து: தேங்காய் பூ!


PUBLISHED ON : மே 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேங்காய் பூ, ருசியாக இருக்கும். இது எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது.

தேங்காய் பூவில், மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை கொடுக்கும்.

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்போர், தேங்காய் பூவை சாப்பிட்டால், முழு எனர்ஜி கிடைக்கும். ஜீரண சக்தி குறைவாக இருந்தால்,தேங்காய் பூ சாப்பிடலாம். இதிலுள்ள, மினரல் வைட்டமின், குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது.

இன்சுலின் சுரப்பை துாண்டுகிறது. இதனால், ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் படியும் கொழுப்பை, கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டிருப்போர், தேங்காய் பூவை சாப்பிட்டு வர, தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில், குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை துாண்டுவதால், கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கும்.

சிறுநீரக தொற்று நோய்களை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவற்றை நம்மை நெருங்காமல், முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளையும் தடுக்கிறது.

தொகுப்பு : வி.சி.கிருஷ்ணரத்னம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us