தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: செவ்வாழை!

நம்மிடமே இருக்கு மருந்து: செவ்வாழை!

நம்மிடமே இருக்கு மருந்து: செவ்வாழை!

2


PUBLISHED ON : ஏப் 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 19, 2026

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்கள் சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளையும் நீக்குகிறது, செவ்வாழை.

செவ்வாழையில், வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச்சத்து, பொட்டாஷியம் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துகள் உள்ளன. இதனால், சிறுநீரகங்களில் கற்களை சேர விடாமல் தடுக்கிறது, செவ்வாழை.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால், இதய நோய்களை எளிதில் நம்மிடம் அண்டவிடுவதில்லை.

நுரையீரல், கல்லீரல், இதயம், குடல் போன்ற முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கு, செவ்வாழை உதவுகிறது. நம்முடைய குடலில், நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை, 10 மடங்கு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மலச்சிக்கலை போக்கக்கூடியது. உடல் எடை சீராக வைக்கவும் உதவுகிறது.

செவ்வாழையை சிறிதாக நறுக்கி, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலே, கண்களிலுள்ள உஷ்ணம் நீங்கி விடும். அதேபோல, மாலைக்கண் நோயால் அவதிப்படுபவர்கள், இரவு உணவிற்கு பின், தொடர்ந்து, 40 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.

தினமும், ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்ட தோல் பிரச்னைகள் தீரும்.

வாரம் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள தொற்று நோய் பாதிப்புகளும் தீரும். அந்த அளவுக்கு கிருமிகளை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி, செவ்வாழைக்கு உள்ளது.

ஒரு நாளைக்கு, இரண்டு செவ்வாழை வீதம், 48 நாட்கள் சாப்பிட்டு வர, ஆண்மைக் கோளாறுகள் நீங்கி விடும்.

செவ்வாழையில், கால்ஷியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், பற்களுக்கு மிகவும் வலு தருகிறது. பலவீனமான பற்கள் இருந்தாலோ அல்லது பல் ஆடுவது போல இருந்தாலோ, ஈறுகள் பலவீனமாக இருந்தாலோ, அத்தனைக்கும் செவ்வாழை மருந்தாகிறது. எனவே, தொடர்ந்து, 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் முற்றிலும் தீரும்.

வாழைப்பழத்தில் பொட்டாஷியம் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுத்து விடுகிறது. ஏற்கனவே, சிறுநீரக கற்கள் பிரச்னை இருப்பவர்களும் செவ்வாழையை வாரம், இரண்டு முறை சாப்பிடுவது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us