sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நவராத்திரி செய்திகள்!

/

நவராத்திரி செய்திகள்!

நவராத்திரி செய்திகள்!

நவராத்திரி செய்திகள்!


PUBLISHED ON : செப் 29, 2024

Google News

PUBLISHED ON : செப் 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிஹோமம்!

நவராத்திரியில் அம்பிகைக்கு உகந்த, சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்: அன்பு கிடைக்கும், வசதி பெருகும், எதிரிகளாலும், இயற்கையாலும் ஆபத்து உண்டாகாது. சுவாசினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டாகும் சாபம் நீங்கும். விவசாயிகளுக்கு நற்பலன் கிட்டும். கல்வி, ஞானம் பெருகும். உத்தியோக உயர்வு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் நல்ல இல்லறம் அமையும். மன அமைதி, தேக ஆரோக்கியம் கிடைக்கும். ஏழ்மை நிலை வராது.

அம்மன் உத்தரவு!

கோவை சிங்காநல்லுாரிலுள்ள செல்ல பாண்டியம்மன் கோவிலில் நவராத்திரி முதல் நாளன்று, கலசம் வைத்து பொம்மைக் கொலு வைக்க, அம்மனின் உத்தரவு கேட்பர். அது கிடைத்தால் கொலு வைத்துக் கொண்டாடுவர். இல்லையெனில் அந்த ஆண்டு கொலு வைபவம் நடத்துவது இல்லை.

பொம்மைகள் ஜொலிக்க!

கொலு வைக்கும் சில நாட்களுக்கு முன்பே, பொம்மைகளை எடுத்து, 'அக்ரிலிக் பெயின்ட்' அல்லது 'ஆயில் பெயின்ட்' பூசி, வெயிலில் காய வைத்தால், பொம்மைகள் புதிதாக ஜொலிக்கும்.

தாம்பூலம்!

கொலுவின் போது மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுக்கும் போது மாறுதலுக்காக, காய்கறி மற்றும் பூக்களின் விதைகள் அடங்கிய பொட்டலங்களை பரிசாகத் தரலாம்.



நிவேதனம்!


நவராத்திரி கடைசி நாள் பூஜையின் போது அம்பாளுக்கு வெறும் சாதம், இலை வடகம், வெண்ணெய், சுக்கு, வெந்நீர் ஆகியவற்றை நிவேதனம் செய்தால், அன்னையின் அருள்பார்வை நம் மீது பட்டு, பாவங்களில் இருந்து விடுபடலாம் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

லட்சப் பசுப்பு!

ஆந்திர மாநிலத்தில் நவராத்திரியின் போது, 'லட்சப் பசுப்பு' என்று எழுதி வைத்திருக்கும் வீடுகளில் பெண்கள், மலை விரளி மஞ்சளை குவித்து வைத்து, வீட்டுக்கு வரும் பெண்களுக்கு அள்ளி வழங்குவது வழக்கம்.லட்சம் மஞ்சள் கிழங்குகள் வைத்திருப்பதால், லட்சப் பசுப்பு என்று பெயர். வாங்கும் பெண்களும், வழங்கும் பெண்களும் அனைத்து வளங்களும், செல்வமும் பெறுவர் என்பது நம்பிக்கை.






      Dinamalar
      Follow us